விடுதலை புலி இயக்கத்துடன் தொடர்பு என்ற தோரணையில் துணை முதல்வர் பி.ராமசாமியிடம் விசாரணையா? அதிர்ச்சி தருகிறது என்கிறார் மு.வீ.மதியழகன்!

விடுதலை புலி இயக்கத்துடன்  தொடர்பு என்ற தோரணையில் துணை முதல்வர் பி.ராமசாமியிடம்  விசாரணையா?
அதிர்ச்சி  தருகிறது என்கிறார்
மு.வீ.மதியழகன்!

மு.வ.கலைமணி.

பினாங்கு, ஜுலை 26-
         விடுதலைப்ப புலிகள் இயக்கத்துடன்
தொடர்பு கொண்டிருப்பதாக்க் கூறி
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமியிடம்
பினாங்கு மாநில ஜனநாயக செயல்கட்சியின் தலைமை
கேள்வி விசாரணை நடத்தியது அதிர்ச்சி தருவதாக ஐபிஎப் உத்தாமா கட்சியின் தேசியத் தலைவர் மு.வீ.மதியழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
        40 ஆண்டுகள் எதிர்கட்சியாய் இருந்து
இன்று ஆளும்கட்சியாக மாறி
ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும்
ஜசெக இரட்டை வேடமிடுகிறதா?
இதனை ஐபிஎப் உத்தாமாவின் கட்சி சம்பந்தப்பட்டவர்களை வன்மையாக கண்டிப்பதாக மு.வீ.மதியழகன் தெரிவித்தார்.
       தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பழிகளை சுமத்தி பி.ராமசாமியை
விசாரிக்க வேண்டுமென திடீரென
பலர் போலீஸ் புகார்கள்
செய்திருப்பது ஒரு கூட்டுச்சதி.
இது பழிதீர்க்க கையாளப்படும்
ராஜதந்திரமாகும்,
உலகில் பல்வேறு நாடுகளில் மதத்தின் பேரில் தீவீரவாதத்தை உருவாக்கிய
எந்த  குற்றவாளியும் அதுவும் மற்ற மற்ற இனத்தினரது சமயம் , கடவுள் , வழிபாட்டு தலங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழிவுபடுத்தி விமர்சனம் செய்தவரும்,
உலகில் சர்ச்சைக்குரியவரும் மதப்போதகருமான சாகிர் நாயக்கை மலேசியாவை விட்டு வெளியேற்ற
வேண்டும் என மிக துணிச்சலாக  வலியுறுத்தி வருவதால் ,
சாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள்
விடுதலை புலிகளுடன் தொடர்பு என்ற கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளதாக அவர் சொன்னார்.
        ஒரு தீவிரவாதிக்கு ஆதரவளித்து
உண்மை நோக்கத்தை திசைத்திருப்பிட , இங்கே பி.ராமசாமி மீது
விடுதலைப்புலி இயக்கத்தை
கொண்டு குற்றம் சாட்டுவதும்
அதனை அவரது சொந்தக் கட்சியின் தலைமையே விளக்கம் கேட்பது என்பது வேடிக்கையானது.
பினாங்கு மாநில துணை முதல்வர்
பி. ராமசாமியின் நிலைபாடும்,
உலகத் தமிழர்களின் நிலைபாடும், ஒட்டுமொத்தமாய் உலகில்
மனிதர்களிடம் காணும் மனிதபிமான நிலைபாடேயன்றி,
அதனை கொச்சைபடுத்தி
விசாரிப்பதானது அதிர்ச்சியை உண்டு ஏற்படுத்துகிறது.
       நம்நாடும் நம்நாட்டு மக்களும்
1946-இல் சுதந்திரம் பெற்றிட போராடிய
தேசிய சுதந்திர போராட்டமே,
விடுதலை புலியின் போராட்டமாகும்,
எப்படி கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவையும்,
பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாஷர் ஹாராபாட்டையும்
ஆதரித்தோமோ அதே மனிதபிமானத்தின் உச்சத்தை இங்கே குற்றம் சாட்டுவது ஏற்புடையதா?
இன்றும் இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மனிதபிமானமே
பிரபாகரனின் போராட்டம்,
தன்னினத்தை தன் குடும்பத்தை தம்மக்களை அழித்தொழிக்கும் கூட்டுச் சதியை எதிர்த்து போராடுவது குற்றமென்றால்,
உலகில் சுதந்திரத்திற்காக போராடிய அத்தனை தலைவர்களும்
இவர்களின் கூற்றுபடி
குற்றவாளிகளே.
      உலகில் 132 நாடுகளில் நேற்றுவரை விடுதலைபுலி இயக்கத்தை தீவிவாத இயக்கம் என்று தடைவிதித்தவர்கள்,
இன்று அதனை திரும்ப பெற்றுக் கொண்டதையும் ஆய்வில் கொண்டிட வேண்டும்.
விடுதலைபுலி இயக்கமோ
பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமியோ நம் நாட்டிற்கு என்ன கேடுவிளைவித்தனர்?
அதன்படி யார் யார் பாதிப்புக்குள்
ஆனார்கள்  என்பதை ஜசெக கட்சியின் தலைமை பொதுமக்களுக்கு விளக்கமளிக்குமா?
       நாட்டில் 2008க்கு முன்பே ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் 
பி.ராமசாமி பொதுநலவாதியும்
துணிச்சலாக நேர்மைக்கு குரல் கொடுத்தவர்.
அன்றய, அமைதி பேச்சுவார்த்தை
குழுவின் ஒரு ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
விடுதலைபுலி இயக்கத்தோடு
ஜெனிவா தலைமையேற்று,
தாய்லாந்தில் நடந்தேறிய
அமைதி பேச்சிலும் கலந்துக் கொண்ட பி.ராமசாமி மற்றும் விடுதலைபுலி இயக்கத்தை ஆதரிப்போரின்
நிலைபாடுகள்,
இனம்சார்ந்த
மொழிசார்ந்த
மனிதபிமானம் சார்ந்த உணர்வின் அடிப்படையேயன்றி,
இங்கே எல்லளவும் தீவீரவாதம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்பதை கருத்தில் வைத்திட வேண்டும்.
         அன்றிலிருந்து இன்றுவரை அதே கருத்தியலில் பயணிக்கும்
இவர்களை ஜசெக  கட்சிகாரர்களாவும், கட்சியின்  வேட்பாளராகவும்,
மாநிலத் துணை முதலமைச்சராகவும் முடிந்த பத்தாண்டு காலத்தில்
யார் இவர்கள் என்று
அறிந்திருக்கவில்லையா?
         நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் மதபோதகர் சாகிர் நாயக்கை
விமர்சனம் செய்தும்,
குடியுமையை ரத்துச் செய்திட போராடிய அன்றைய எதிர்க் கட்சியினர்,
இன்று யாருக்கோ வெண்சாமரம்
வீசுவது ஏனோ?
இது பயமா? பதவி சுகமா?
அதுபோல அன்று மௌனம்
காத்தவர்கள் இன்று 50க்கும்
மேற்பட்ட போலீஸ் புகார்கள்
செய்தது எதற்கு?
நாட்டில்  பல்வேறு குற்றங்களுக்காக பொதுமக்கள் செய்த
ஆயிரகணக்கான புகார்கள் மீது கொண்டிராத நடவடிக்கைகள் இன்று திடீரென பி.ராமசாமியின் பக்கம்
பாய்வதும் அதன்வழி ஒட்டுமொத்த
மலேசிய தமிழர்களையும்
தீவிரவாதி வரிசையில்
திட்டமிட்டு நசுக்கிட நகர்த்தும் அரசியல் சதியாகவே எண்ண வேண்டியுள்ளது என தனது மன ஆதங்கத்தை மதியழகன் வெளிக் கொணர்ந்தார்.

Comments