மஇகாவின் சொத்துக்கள் முறையாக கையாளப்படுகிறது! அதனை யாரும் அபகரிக்கவில்லை! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

மஇகாவின் சொத்துக்கள் முறையாக கையாளப்படுகிறது!
அதனை யாரும் அபகரிக்கவில்லை!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

தேசம் குணாளன் மணியம்


கோலாலம்பூர், ஜூலை 26-
        மஇகாவின் சொத்துக்கள் அனைத்து மஇகா கைவசமே இருக்கிறது. அது முறையாக கையாளப்பட்டு வருவதாக அதன் தேசியத் தலைவர் டீன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

       மஇகாவுக்கு உரிமையான  சொத்துக்கள் மஇகா வசமே இருக்கிறது. அதனை யாரும் அபகரிக்கவில்லை என்று மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமையேற்ற டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு சொன்னார்.
         மஇகாவின் சொத்து விவரங்கள் குறித்து மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அது யாருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வாடகை மதிப்பு என்ன. சொத்து மதிப்பு என்ன என்பது போன்ற விவரங்கள் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.
            என் தலைமைத்துவத்தில் கட்சி வெளிப்டையான அரசியலை நடத்த விரும்புகிறது. ஆகையால், மத்திய செயலை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சித் தலைமை சுயமாக முடிவெடுக்கும் நிலை இனி இருக்காது. இதற்காகவே மஇகா சொத்துகள் குறித்து வெளிப படையாக பேசியதாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்

Comments