தமிழர் வரலாற்றை பறைசாற்ற மஇகா தலைமையகத்தில் தமிழ் நூலகம்! மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

தமிழர் வரலாற்றை பறைசாற்ற மஇகா தலைமையகத்தில் தமிழ் நூலகம்!
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 29-
        தமிழர் வரலாற்றைப் பறைசாற்ற மஇகா தலைமையகத்தில் தமிழ் நூலகம்  அமைக்கப்படவிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அறிவித்துள்ளார்.
       இந்நாட்டில் தமிழர் வரலாற்றை நினைவுக்கூற வேண்டியது மிகவும் அவசியம். இந்த பொது தமிழ் நூலகம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில்  மஇகா தலைமையகத்தில்  அமைக்கப்படவிருப்பதாக மஇகா தலைமையகத்தில் மத்திய செயலவை கூட்டத்திற்கு தலைமையேற்ற  டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் செய்தியாளர்களிடம் அவ்வாறு  கூறினார்.
        இந்த தமிழ் நூலகம் டத்தோ சரவணன் ஒருங்கிணைப்பில் குறுகிய காலத்தில் அமையப் பெறும். இந்த தமிழ் நூலகத்தில் தமிழர் வரலாற்றை பறைசாற்றும் வகையில் நூற்றுக்கணக்கான தமிழ்  நூல்கள் வைக்கப்படும். இந்நூல்களை பொதுமக்கள் படித்து பயன்பெறலாம் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
            தமிழர் வரலாற்று தமிழ்நூல்களை வைத்திருப்பவர்கள் அதனை மஇகாவின் தமிழ் நூலகத்திற்கு வழங்கி உதவலாம் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
           இந்தோனேசியா, தாய்லாந்து  போன்ற நாடுகளில் தமிழர் வரலாறு பலவழிகளில்ல பொறிக்கப்பட்டுள்ளன. அதுபோலவே மலேசியாவிலும் தமிழர் வரலாறு பதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதன் காரணமாகவே மஇகா தலைமையகத்தில்  தமிழ் நூலகம் அமைக்கப்படுவதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments