தேசிய, மாநில தேர்தல்கள் தொகுதி அளவில் நடத்தப்படும்! - டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

தேசிய, மாநில தேர்தல்கள் தொகுதி அளவில் நடத்தப்படும்!
- டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தகவல்

தேசம் குணாளன் மணியம்

 கோலாலம்பூர், ஜூலை 26-
           மஇகாவின் தேசிய, மாநில தேர்தல்கள் ஒரே நாளில் தொகுதி அளவில் நடத்தப்படும் என்று தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

          தேசிய அளவிலான மூன்று உதவித் தலைவர்கள், மாநில அளவிலான 10 நிர்வாக பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
      மஇகா  வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்படுகின்ற இத்தேர்தல், ஒரு கிளையில் இருந்து அறுவர் வீதம் மொத்தம் 24 ஆயிரம் பேர் தத்தம் தொகுதிகளில் வாக்களிப்பர். தற்போதைய அரசியல் சூழலில் அவர்களை கட்சி தலைமையகத்துற்கு இருமுறை வரச்சொல்லி அலையவிடாமல் தொகுதி அளவிலேயே இத்தேர்தல் நடத்தப்படுவதால் நேரமும் பணமும் வரவாக இருக்கும் என்று ம இ கா மத்திய செயலை கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்  செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்
      மஇகாவில் இருக்கும் 4,600 கிளைகளில் 4,300 கிளைகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதானது கட்சி இன்னமும் வலுவாக இருப்பதை காட்டுகிறது.
       இந்நிலையில்  வேட்புமனுத்தாக்கல் செய்யாமல் இருக்கின்ற சுமார் 300 கிளைகளுக்கு மறுவாய்ப்பு வழங்க மத்திய செயலவை அனுமதி வழங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட கிளைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
         மஇகாவிற்கு கிளைகள் ஆதரவு முக்கியமானவை.   கட்சியின் எதிர்கால நலன் கருதி அடிமட்ட உறுப்பினர்களை நேரிடையாகச் சந்தித்து இந்திய சமூகத்திற்கு சேவையாற்ற சம்பந்தப்பட்டவர்கள்  அழைப்படுவார்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments