மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர்! நம்பிக்கை கூட்டணிக்கு மஇகா சுபாஷ் வேண்டுகோள்!

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர்!
நம்பிக்கை கூட்டணிக்கு மஇகா சுபாஷ் வேண்டுகோள்!

கோலாலம்பூர், ஜூலை 9-
        தேர்தலுக்கு முன்பு மக்களின் நம்மையையை மையமாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதாக வாக்களித்திருக்கும் நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று  சிலாங்கூர் மஇகா இளைஞர் பகுதி தகவல் பிரிவுத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
         நாட்டின் தேர்தல் நடந்தி முடிந்து 2 மாதங்கள் ஆகியும், இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றுவதற்காக நம் இந்திய மக்கள் காத்து கொண்டிருகின்றனர். எனினும் எந்த ஒரு   முன்னேற்றமும் காணப்படாத நிலையில் மக்கள் சிறிது வருத்தத்தில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்று சுபாஷ் தெரிவித்தார்.
      மக்கள் இதுகுறித்து கேள்வி கேட்டால், பெரும்பாலான நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களும் தலைவர்களும் நேற்று திருமணம் செய்து இன்று குழந்தை பெற முடியாது என்று ஒரே பாணியிலான பதிலேயே கொடுக்கின்றனர்.  இன்னும் சிலர் சமூக வலைதளங்களின் கேள்வி கேட்பவர்களை கொட்சை வார்த்தைகளில் திட்டித் தீர்க்கின்றனர்.
          மக்களும் வேண்டுமென்றே நம்பிக்கை கூட்டணித் தலைவர்களை விமர்சிக்கவில்லை. இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளன.  இதில் உதாரணமாக, திருமதி இந்திரா காந்தியின் கணவரைத் தேடி, அவர் கடத்திச் சென்ற பெண் பிள்ளையை ஒப்படைக்கக்கோரி காவல் துறைக்கு பல ஆண்டுகள் நீதிமன்றம் ஆணையிட்டும் இன்று வரை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆனால்,  தப்பிச் சென்ற ஜமாலை உடனடியாக கைது செய்தது அனைவரையும் சிந்திக்க வைக்கின்றது.
அது மட்டுமா? தேசிய முன்னணி ஆட்சியில் சாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என போராடி வந்த நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள், இன்று இடம் தெரியாமல் இருப்பது ஏமாற்றமே.
நம்பிக்கை கூட்டணி ஆட்சியில், முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டுவதாக உறுதி கூறியவர்கள், குறைந்தபட்சம் அதற்கான அறிவிப்பாவது செய்யலாமே? அதிலுமா மௌனம் ஏன் என்று சுபாஷ் கேள்வி எழுப்பினார்.
          மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே நம்பிக்கை கூட்டணித் தலைவர்களின் தற்போதைய கடமை.
இதனை கண்காணிப்பது எங்களைப் போன்ற எதிர்கட்சித் தலைவர்கள் கடமையாகும். ஆகையால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தினார்.

Comments

Post a Comment