நான்காம் ஆண்டு அனைத்துலக யோகா தினம், யோகாவில் புதிய உலக சாதனை படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி அம்ருத்தா

நான்காம் ஆண்டு அனைத்துலக யோகா தினம்,
யோகாவில் புதிய உலக சாதனை படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி அம்ருத்தா

கோலாலம்பூர், ஜூலை 6-
        நான்காம் ஆண்டு அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மலேசியாவில்  பிரிக்பீல்ட்ஸ் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலை, பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் 2018 ஆசனங்கள் செய்து
யோகாவில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி அம்ருத்தா.
           உலக யோகா தினம் ஜுன் 21ஆம் நாள் உலகளாவிய நிலையில் நடைபெற்றது. இந்த யோகா தினத்தில் உலகம் முழுவதும் யோகா பயிற்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் பத்துமலையில் 2,500 பேர் கலந்து கொண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இதனை யோகா மாஸ்டர் டாக்டர் ஜெயந்தி நடத்தினார்.
           இந்நிலையில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைத்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் மையத்தில் இந்திய கலை, பண்பாட்டு மையத்தில் சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி அம்ருத்தா ஆனந்த் நான்கு மணிநேரம் மூன்று நிமிடத்தில் 2018 ஆசனங்கள் செய்து ஏழாவது முறையாக புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
       செல்வி அம்ருத்தா சென்னை அண்ணமலை பல்கலைக்கத்தில் யோகாவில் M.Phil படித்து வருகிறார். இந்த நிகழ்வுக்கு இந்திய கலை, பண்பாட்டு மையத்தின் இயக்குநர் அய்யனார், சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எல்.சேகரன் முன்னிலை வகித்து நற்சான்றிதழ் வழங்கினர்.
         இந்நிகழ்வில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆறுமுகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குநர் அருள், முன்னாள் மலேசிய துணையமைச்சர் கோகிலன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். செல்வி அம்ருத்தாவிற்கு முனைவர் ஜெயந்தி, முனைவர் நடராஜன் ஆகியோர் யோகா பயிற்சி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments