உறவுகளை சேர்த்து வைக்கிறது மின்னல் எஃப்எம் உறவுகள் தொடர்கதை நிகழ்ச்சி

உறவுகளை சேர்த்து வைக்கிறது மின்னல் எஃப்எம் உறவுகள் தொடர்கதை நிகழ்ச்சி

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 24-
       மலேசியாவில் தன் குடும்ப உறவுகளைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்காக  மின்னல் எஃப்எம்மில் ஒலியேறிக் கொண்டிருக்கும் "உறவுகள் தொடர்கதை" நிகழ்ச்சியின் வழி பல உறவுகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும்  அறிவிப்பாளருமான தெய்வீகன் தாமரைச்செல்வன் கூறினார்.
          இந்த "உறவுகள் தொடர்கதை" நிகழ்ச்சியின் வழி இதுவரை 50 விழுக்காடு குடும்ப உறவுகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒலியேறி வரும் "உறவுகள் தொடர்கதை" நிகழ்ச்சி 70 பாகங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 6.00 மணி தொடங்கி 7.00 மணிவரையில் ஒலியேறி வருவதாக தெய்வீகன் சொன்னார்.
        இந்த "உறவுகள் தொடர்கதை" நிகழ்ச்சி மக்கள் அதிகம் விரும்பும் நிகழ்ச்சியாகும். இதன்வழி பல குடும்ப உறவுகளுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 37 ஆண்டுகளாக தன் குடும்பத்தைத் தேடிய குமாரை குடும்பத்துடன் சேர்த்து வைத்த நிகழ்வை நினைவுகூர்ந்தார் தெய்வீகன். இந்த வெற்றிக்கு துணை நின்ற நேயர்கள் அனைவருக்கும் தெய்வீகன்  நன்றி கூறினார்.

Comments