திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பிரார்த்தனை

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய 
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பிரார்த்தனை

தேசம் குணாளன் மணியம்

         கோலாலம்பூர், ஜூலை 29-   
        தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று மலேசிய மக்கள் சார்பில் இறைவனைப் பிரார்த்திப்பதாக அண்மையில் 10ஆவது மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்றிருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.
          அரசியல் ஆலமரம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி மலேசியாவுடன் மிகவும் நெருக்கமானவர். மலேசிய இந்தியர் காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் துன் டாக்டர் சாமிவேலு காலம் தொட்டு மலேசிய மக்களோடும், மலேசிய இந்தியர் காங்கிரசோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர் கலைஞர் மு.கருணாநிதி. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு மலேசிய மக்களுக்கு பெருமை சேர்த்தவர். அவரை பல முறை நான் சந்தித்தி பேசியிருக்கிறேன். அவர் மிகவும் அன்பானவர். சில நாட்களுக்கு முன்பு உடலநலக்குறைவினால் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோபாபுரத்தில் உள்ள தமது இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.
       "கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் விரைவில் குணமடைய மலேசிய மக்கள் சார்பில் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
     மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பியிருக்கும் கலைஞர் கருணாநிதி தற்போது நலமாக இருக்கிறார் என்றும அவரது மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி கூறியதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற மலேசிய மக்கள் சார்பில் இறைவனை வேண்டிக் கொள்வதாக
டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments