தனிநபர் சாகிர் நாயக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதிக்கு பாதுகாப்பா? அமைச்சர் குலசேகரன் மௌனம் ஏன்? மலேசிய அரசு சாரா இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு ஆட்சேபம்-எதிர்ப்பு!

தனிநபர் சாகிர் நாயக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதிக்கு பாதுகாப்பா?
அமைச்சர் குலசேகரன் மௌனம் ஏன்?
மலேசிய அரசு சாரா இந்து இயக்கங்கள் கூட்டமைப்பு ஆட்சேபம்-எதிர்ப்பு!

தேசம் குணாளன் மணியம்

  கோலாலம்பூர், ஜூலை 9-
          இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் ஒரு பயங்கரவாமிக்கு மலேசியா பாதுகாப்பு வழங்கியுள்ளது கண்டு தாங்கள் கொதிப்படைந்துள்ளதாக மலேசிய அரசு சாரா இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
             சாகிர் நாயக் ஒரு குற்றவாளி என்று இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தி அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை முன்வைத்த போதிலும் அவரை அனுப்ப முடியாது என்று கூறியிருக்கும் பிரதமர் துன் மகாதீரின் அறிவிப்புக்கு தாங்கள் எதிர்ப்பும், ஆட்சேபமும் தெரிவிப்பதாக ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் கூடிய அரசு சார்பற்ற பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் ஆலயங்களின் சார்பில் பேசிய சுவாமி ராமாஜி கூறினார்.
           நாட்டின் முந்தைய அரசாங்கம் சாகிர் நாயக்கிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளதை நாங்கள் கண்டித்தோம். எதிர்ப்பு தெரிவித்தோம். இதன் காரணமாக தேசிய முன்னனி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தோம். ஆனால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மற்றும் பிரதமர் துன் மகாதீர்  இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதை  கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஒருமித்த குரலில் கண்டிப்பதாக ராமாஜி தெரிவித்தார். 
           உலகின் 17 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்பு தகுதியை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம்  ரத்து செய்ய வேண்டும் என்றும், அவரை இந்திய அரசாங்கத்தின் விண்ணப்பத்திற்கு மதிப்பளித்து இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று துன் மகாதீரை கேட்டுக் கொள்வதாக ராமாஜி சொன்னார்.
       பிரிக்பீல்ட்சிலுள்ள கோப்பியோ எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான உலக அமைப்பு அலுவலகத்தில் இதுகுறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சாகிர் நாயக் குறித்து பிரதமர் துன் மகாதீர் தெரிவித்த கருத்து குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
           சாகிர் நாயக் ஒரு மதவாதி என்பது பலருக்குத் தெரியும். அவர் இந்து, கிறித்தவ மதத்தை சாடி பேசி மலேசிய மதநல்லிணக்கத்தை குழைத்ததற்கான பல காணொளி ஆதாரங்கள் இருக்கின்றன. இதுகுறித்து முன்பு எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் பலர் குரல் எழுப்பி வந்தனர். ஜசெக கட்சியைச் சேர்ந்த மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  ஆனால், இன்று குலசேகரன் மௌனம் காக்கிறார். இது ஏன் என்று ராமாஜி கேள்வி எழுப்பினார்.
       இந்த சிறப்பு கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.
         தேசிய முன்னனி அரசாங்கம் தவறு செய்கிறது என்ற அடிப்படையில் நாங்கள் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தோம். ஆனால், இன்று எல்லாம் தலைகீழாக நடக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் யார் மீதும் தனிப்பட்ட விரோதம் காட்டவில்லை. ஆனால், அதேசதயம் தேசிய முன்னணி அரசாங்கம் செய்த அதே தவற்றை நம்பிக்கை கூட டணி அரசு செய்யக் கூடாது. இந்த முறை இந்திய அரசாங்கமே சாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப விண்ணப்பித்திருப்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே முறையாகும். மலேசியர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்திருக்கும் சாகிர் நாயக்கை ஏன் அரசாங்கம் இன்னும் தற்காத்து வருகிறது? ஏன் முக்கியத்துவம் வழங்கி வருகிறது? இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாங்கள் போராட்டம் மேற்கொள்ள வேண்டிவரும் என்று 15 அமைப்புகளுக்கு தலைமையேற்ற   சுவாமி ராமாஜி குறிப்பிட்டார்.

Comments