இந்தியர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்த 4 பில்லியன் சிறப்பு நிதி! அமைச்சர் செனட்டர் பி.வேதமூர்த்தி தகவல்

இந்தியர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்த 4 பில்லியன் சிறப்பு நிதி!
அமைச்சர் செனட்டர் பி.வேதமூர்த்தி தகவல்

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஆகஸ்டு 21-
          இந்தியர்களின் நிலையை உயர்த்த அரசாங்கம் 4 பில்லியன் சிறப்பு நிதி் ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பி.வேதமூர்த்தி கூறினார்.
        இந்த சிறப்பு நிதி அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் குறிப்பாக பி40 தரத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும். தேசிய நீரோட்டத்தில் இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்த  பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்  எண்ணம் கொண்டுள்ளதாக மேலவையில் ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் கேள்விக்கு பதிலளிக்கையில் செனட்டர் பி.வேதமூர்த்தி அவ்வாறு சொன்னார்.
          இந்த திட்டத்திற்காக அரசாங்கம் தொடக்கமாக ஒரு குறிப்பிட்ட நிதி வழங்கும். அதன் பிறகு அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்து  இருந்து  நிதி திரட்டப்படும் என்றார் பி.வேதமூர்த்தி.
          தேசிய முன்னனி அரசாங்கம் ஆரம்பித்த இந்தியர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தியர்களின் சொத்துடைமை உயர்த்தப்படுமா என்று டத்தோ சம்பந்தன் கேட்டார். இந்த இந்தியர் சிறப்பு மேம்பாட்டுத்  திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளும் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு இந்தியர் சொத்துடைமையை உயர்த்த அரசாங்கம் பாடுபடும் என்று செனட்டர் பி.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

Comments