*மலேசிய கிண்ணப் போட்டிகளில் மிஃபா அணி சாதிக்குமா?* *முதல் ஆட்டத்தில் ஜே.டி.தி உடன் மோதுகிறது*

*மலேசிய கிண்ணப் போட்டிகளில் மிஃபா அணி சாதிக்குமா?*
*முதல் ஆட்டத்தில் ஜே.டி.தி உடன் மோதுகிறது*

கோலாலம்பூர், ஆகஸ்டு 2-
          இந்திய சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் காற்பந்துத் துறையில் மிஃபா அணி பல சாதனைகளை படைத்து வருகின்றது.
அந்த வகையில் மலேசிய கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் குழு என்ற பெருமையும்  பெற்றுள்ள நிலையில் இந்தப் போட்டிகளிலும் மிஃபா அணி திறம்பட செயல்பட்டு சாதிக்குமா?  என சமுதாயத்தினர்கள் பெரிதும்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
        நமது அணி முதல் ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜே.டி.தி அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகின்ற ஆகஸ்டு 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில்  டான்ஸ்ரீ டத்தோ ஹாஜி ஹசான் யூனோஸ், லார்கின் அரங்கத்தில் நடைபெறுகிறது. நமது அணி வீரர்களைப் பொறுத்தவரையில் வெற்றி தோல்விகள் கடந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
அதே நேரத்தில் பலம் பொருந்திய அணியுடன் மோதுகின்ற சூழ்நிலையில் ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
          இந்த ஆட்டம் குறித்து மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் கூறுகையில் பிரிமியர் லீக்கில் களம் காணும் போது மலேசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடும் தகுதியினை பெற வேண்டுமென்ற இலக்கோடு நமது பயணம் அமைந்தது. பல தடைகள் தாண்டி நமது கனவு  நனவானது.
         இந்த நேரத்தில் நமக்கான வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பாக விளையாட வேண்டுமென்ற வேட்கை விளையாட்டாளர்
களுக்கு புகுத்தப் பட்டுள்ளதாகவும், தலைமைப் பயிற்றுநர் கே.தேவன் அவர்களின் தலைமையில் நமது அணி இன்னும் பல வெற்றிகளை எட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
          கே.தேவன் குறிப்பிடுகையில் மலேசிய கிண்ணப்போட்டிகளில் நமது அணியின் பிரிவில்  ஜே.டி.தி, கெடா, கிளந்தான் போன்ற பலம் பொருந்திய அணிகள்  இருப்பினும் நமது வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்றார் அவர்.  தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.பலமான அணிக்கெதிராக களம் காண்கிறோம் என்ற நிலைப்பாட்டில் அச்சப்பட ஒன்றும் இல்லை.நமது ஆற்றலை வெளிப்படுத்துவோம்  என அவர் மேலும் கூறினார்.
           சமுதாய பெருமக்களே! நாம் அனைவரும் நமது அணிக்கு ஆதரவளிப்போம்! வெற்றிகள் பல குவிப்போம்!

*நமது அணி* *நமது கடமை* *நமது வெற்றி*

Comments