*நூலிழையில் கெடாவிடம் வீழ்ந்தது மிஃபா!* *சி பிரிவில் தொடர்ந்து முதலிடம்*

*நூலிழையில் கெடாவிடம் வீழ்ந்தது மிஃபா!*
*சி பிரிவில் தொடர்ந்து முதலிடம்*

கோலாலம்பூர், ஆகஸ்டு 20-
        மலேசிய கிண்ண போட்டிகளில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து களம் இறங்கும் முதல் அணியான மிஃபா கடந்த 2 ஆட்டங்களில் அதிரடி படைத்த நிலையில் கெடா அணிக்கான ஆட்டத்தில் நூலிழையில் தனது வெற்றியை இழக்க நேரிட்டது.
        கெடா டாருல் அமான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நமது அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது 2-1 என்ற கோல்கணக்கில்  முன்னிலை பெற்றிருந்த போதிலும்   நமக்கான பெனால்டி வாய்ப்பை நழுவ விட்டதும் நமது வெற்றியை பாதித்தது. இருப்பினும் விளையாட்டாளர்கள் ஆட்டத்தின் இறுதி வரை கடுமையாக போராடினார்கள்.
      நமது அணியினர் அனுபவம் இல்லாத நிலையிலும் சூப்பர் லீக் அணியின் தரத்திற்கு விளையாடுவது மலேசிய  காற்பந்து ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டுக்களையும்  பெற்றுள்ளது.
       இந்த ஆட்டம் குறித்து அணியின் தலைமைப்பயிற்றுநர் கே.தேவன் குறிப்பிடுகையில் வெற்றி, தோல்விகள் கடந்து  வரவிருக்கும் ஆட்டங்களில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
             நமது அணி சி பிரிவில் 6 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments