இன நல்லிணக்கத்தை பேண அனைவரும் பாடுபட வேண்டும்! ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்து

இன நல்லிணக்கத்தை பேண அனைவரும் பாடுபட வேண்டும்! ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்டு 22-
        இந்நாட்டில் இன நல்லிணக்கத்தைப் பேண அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
         நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற நிலையில் ஒன்றுபட வேண்டும். நோன்புப் பெருநாள், தீபாவளி, சீனப்புத்தாண்டு, கிறிஸ்மஸ், விசாக தினம் உள்ளிட்ட சமய பெருநாட்களை ஒன்றிணைந்து கொண்டாடுவதன் வழி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும் என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
          நாம் சமய, இன ரீதியில் வேறுபாட்டிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலேசியர்கள் எனும் உணர்வு இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வுதான் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
           மலேசிய முஸ்லிம்கள் அனைவருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments