ஒரே மலேசியா, ஒரே இனம் கொள்கையில் தேசிய தினத்தைக் கொண்டாடுவோம்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்து

ஒரே மலேசியா, ஒரே இனம் கொள்கையில் தேசிய தினத்தைக் கொண்டாடுவோம்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்டு 31-
      ஒரே மலேசியா, ஒரே இனம் கொள்கையில் அனைவரும் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
        நம் நாட்டில் பல இன மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நாம் அனைவருக்கும்  இன நல்லிணக்கம் மிகவும் முக்கியம். இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப்  பேண அனைவரும் பாடுபட வேண்டும் என்று தேசிய தின  வாழ்த்துச் செய்தியில் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
      இந்நாட்டில் இன நல்லிணக்கம் ஒற்றுமையை ஏற்படுத்தும். நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற நிலையில் ஒன்றுபட வேண்டும். நோன்புப் பெருநாள், தீபாவளி, சீனப்புத்தாண்டு, கிறிஸ்மஸ், விசாக தினம் என்று அனைத்து பெருநாட்களையும் நாம் ஒன்றிணைந்து கொண்டாடி வருகிறோம். இதன்வழி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும் என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
          நாம் சமய, இன ரீதியில் வேறுபாட்டிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலேசியர்கள் எனும் உணர்வு இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வுதான் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
           மலேசியர்கள் அனைவருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments