தமிழ் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பிய கலைஞர் மு.கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்தேன்! மஇகா தேசியத் தலைவர் டீன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இரங்கல்

தமிழ் எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பிய கலைஞர் மு.கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்தேன்!
 மஇகா தேசியத் தலைவர் டீன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்  இரங்கல்

தேசம் குணாளன் மணியம்


கோலாலம்பூர், ஆகஸ்டு 8-
         தமிழ் எழுத்துகள் மூலம் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக தமிழ் இளைஞர்களை வீறுகொண்டு எழச் செய்த தமிழ்த் தொண்டர் கலைஞர் மு. கருணாநிதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ந்ததாக  மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


           தமிழக மக்கள் மட்டுமன்றி உலக மக்களுக்கும் தமிழ் அறிஞராக இருந்து தமிழை தன் உயிர் மூச்சாக நேசித்து  வந்த கலைஞர் மு.கருணாநிதி காவேரி மருத்துவமனையில் துயில் கொண்டது தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும் என்று தேசம் தொலைக்காட்சிக்கு வழங்கிய இரங்கல் செய்தியில் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.            நான் அண்மையில்தான் கலைஞர் சிகிச்சைப் பெற்று வந்த காவேரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கலைஞரை பார்த்தேன். அவரது புதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். என்னோடு மஇகா தேசிய  துணைத் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம.சரவணன், மஇகா தேசிய உதவித் தலைவர்  செனட்டர் டத்தோ டி.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.  நாடு திரும்பிய இருநாட்களில் அவரது மரணச் செய்தி தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் கலைஞரை இழந்து மீளாத் துயரில் மூழ்கி இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் மலேசிய மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும்  டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.
        தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் 5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்திருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவராக 50 ஆண்டுகள் இருந்த வந்த முத்தமிழ் வித்தகரும், சிறந்த மூத்தப் பத்திரிக்கையாளருமான, பன்முக ஆற்றல் படைத்தவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்.
           சுமார் 80 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து தமிழை நேசித்தும், சுவாசித்தும் வாழ்ந்து தனது இறுதி மூச்சை நிறுத்தியுள்ளது மிகுந்த வேதனையளிப்பதாக டான்ஸ்ரீ  விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
            கலைஞர் தம்  எழுத்துக்களால் தமிழ்ச் சமூகத்தை தட்டி எழுப்பியவர். அவரது ஒவ்வோர் எழுத்தும் தமிழ் இளைஞர்களை வீறுகொண்டு எழச் செய்ததை யாராலும் மறுக்க முடியாது. கலைஞரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி உடல்நலம் குன்றி சில வாரங்களாக  உடல்நலம் குன்றி சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
       தமிழக மக்கள் கலைஞரை இழந்து  துயரத்தில் மூழ்கியுள்ள நிலையில் மலேசிய மக்களும் துயரத்தில் மூழ்கியிருக்கின்றனர். கலைஞரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் தமிழக மக்களுக்கும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மலேசிய மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

Comments