இந்திய சமுதாய நலன் கருதி செடிக் திட்டத்தை பி.வேதமூர்த்தி திறம்பட செயல்படுத்துவார்! -ஐயப்பன் முனியாண்டி

இந்திய சமுதாய நலன் கருதி செடிக் திட்டத்தை  பி.வேதமூர்த்தி திறம்பட செயல்படுத்துவார்!
-ஐயப்பன் முனியாண்டி  

தேசம் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஆகஸ்டு 9-
          மலேசிய இந்திய சமுதாயம் சமூக, பொருளாதார நிலையில் மேம்பட வேண்டும் என்பதற்காக  முந்தைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செட்டிக் எனப்படும் மலேசிய இந்திய சமுதாய பொருளாதார மேம்பாட்டு இயக்கத் திட்டத்தை செயல்படுத்தத்  ஒற்றுமை, சமூக மேம்பாட்டு அமைச்சர் பு.வேதமூர்த்தி தகுதியானவர் என்று கிள்ளான் குளோ ஆசியா கல்லூரியின் ஆலோசகர் ஐயப்பன் முனியாண்டி புகழாரம் சூட்டியுள்ளார்.
           இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு செடிக் ஒரு முக்கியமான அமைப்பு. இந்த அமைப்பின் வழி இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலையை ஒட்டு மொத்தமாக மேம்படுத்த முடியும்.
இந்திய சமுதாய சிந்தனை உடையவர்கள் கண்டிப்பாக சமுதாயத்தை மேம்படுத்த முடியும். அந்த வகையில் அமைச்சர் பி.வேதமூர்த்தி எப்போதும் சமுதாய சிந்தனை உடையவராக இருப்பதால் செடிக் திட்டத்தை சமுதாய நலன் கருதி செம்மையாக செயல்படுத்துவார் என்று ஐயப்பன் முனியாண்டி தேசம் தொலைக்காட்சிக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார்.
             தேசிய முன்னனி ஆட்சியில் பிரதமர் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வந்த செடிக் அமைப்பு தற்போது ஹிண்ட்ராப் தலைவர் அமைச்சர் பி.வேதமூர்த்தி வகித்து வரும் ஒற்றுமை, சமூக மேம்பாட்டு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த கணக்கறிக்கை, இதில் பயனடைந்தவர்கள் ஆகியவை குறித்து முழு ஆய்வு செய்யவிருப்பதாக அமைச்சர் பி.வேதமூர்த்தி அறிவித்துள்ளதானது இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த அவர் எண்ணம் கொண்டுள்ளதை காட்டுவதாக ஐயப்பன் முனியாண்டி சொன்னார்.
      இந்திய சமுதாய நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில்  செடிக் திட்டத்தை வேதமூர்த்தி கையாள்வார். செடிக் திட்டத்தின் கீழ் 800க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதன் வழி அது முறையாக அதன் இலக்கை அடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும். கடந்த காலங்களில் குறிப்பிட்ட சிலருக்கு செடிக் பணம் வழங்கப்பட்டுள்ளதால் அதனை ஆய்வு செய்து செயல்படுத்தும் பி.வேதமூர்த்தியின் நடவடிக்கை சரியானது என்று ஐயப்பன் முனியாண்டி குறிப்பிட்டார்.

Comments