செலாயாங் ஜெயா ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 22ஆம் ஆண்டு திருவிழா! நாளை சனிக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்-கங்கையம்மன் திருக்கல்யாணம்

செலாயாங் ஜெயா ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 22ஆம் ஆண்டு திருவிழா!
நாளை சனிக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்-கங்கையம்மன் திருக்கல்யாணம்

செலாயாங், செப்டம்பர் 6-
               செலாயாங் ஜெயா, இந்தான் பைடூரி ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின்  22ஆம் ஆண்டு ஆடித் திருவிழா செப்டம்பர் 15 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இந்த ஆடித் திருவிழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.
மேலும்
நாளை செப்டம்பர் 8 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ  சுந்தரேஸ்வரர்-கங்கையம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறும்.
இந்தான் பைடூரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா செப்டம்பர் 6 தொடங்கி செப்டம்பர் 16 வரையில் சிறப்பு பூசைகள், பால்குடம், ரத ஊர்வலம், மஞ்சள் நீராட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் நடைபெறவிருப்பதாக ஆலய குருக்கள் லெட்சுமணன் தெரிவித்தார்.
          இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கொடி ஏற்றம் நடைபெறும்.
அதன்பிறகு நாளை சனிக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்- கங்கையம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் செப்டம்பர் 15 சனிக்கிழமை காலை 5.30 மணி தொடங்கி சிறப்பு பூசைகள் நடைபெறும். அதன்பிறகு செயிண்ட் மேரி ஆங்கில ஆரம்பப் பள்ளியில் அருகில் இருக்கும் ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், தீச்சட்டி புறப்பாடு ஆலயம் வந்த பிறகு பிறகு சிறப்பு பூசை நடைபெறும். இதனையடுத்து பிற்பகல் 2.00 மணிக்கு ரத ஊர்வலம் நடைபெறும். அதன்பிறகு மறுநாள் செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை மஞ்சல் நீராட்ட நிகழ்வு ஆலய வளாகத்தில் நடைபெறும். அன்றைய தினம் இரவு ஸ்ரீ மகா மாரியம்மன் பொன்னுஞ்சல் காட்சியோடு ஆடித் திருவிழா நிறைவு பெறும் என்று லெட்சுமணன் குருக்கல் தெரிவித்தார்.
             செலாயாங் ஜெயா, இந்தான் பைடூரி ஆலயத் திருவிழாவில் சுற்று வட்டார மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்ட லெட்சுமணன்  குழுக்கள் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு
012-2800344

Comments