பிடி 3 மாணவர்கள் தேர்வில் சாதனை படைக்கவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் "காந்திவா லீக்" போட்டியை நடத்துகிறது! இணை இயக்குநர் சுரேந்திரன் தகவல்

பிடி 3 மாணவர்கள் தேர்வில்  சாதனை படைக்கவே ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்  "காந்திவா லீக்" போட்டியை நடத்துகிறது!
இணை இயக்குநர் சுரேந்திரன் தகவல்

குணாளன் மணியம்

பெட்டாலிங் ஜெயா, செப். 9-
         இந்திய மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பிடி3 மாணவர்கள் தேர்வில் சாதனை படைக்கவே "காந்திவா லீக்' போட்டியை நடத்தி வருவதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேந்திரன் கூறினார்.

            ஸ்ரீ முருகன் ஆசிரமத்தில் பிடி3 மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் பிரத்தியேக வகுப்புகளில் பல பிரிவுகளில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பிடி3 சாதனையாளர்களாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஆசிரமத்தில் நடைபெற்ற "காந்திவா லீக்" இறுதிச் சுற்று போட்டி நிகழ்வில் சாதனையாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய போது  சுரேந்திரன் தெரிவித்தார்.          இந்த "காந்திவா லீக்" போட்டி இவ்வாண்டு தொடக்கம் நடத்தப்பட்டு வந்தது. பிரத்தியேக வகுப்பில் தவறாமல் கலந்து கொண்ட மாணவர்கள், பாடங்களில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் என்று பல பிரிவுகளில் மாணவர்கள் தேர்வு செய்யபபட்டு  இறுதிச் சுற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சுரேந்திரன் உரையாற்றினார்.


           மாணவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்கள் சாதனையை நோக்கி நடக்க வேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும்.கல்வி ஒன்று மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் என்பதால் பிடி3 மாணவர்கள தேர்வை நோக்கி நகர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
         இந்த "காந்திவா லீக்" போட்டியின் இறுதிச் சுற்றில் 20 வாரங்கள் விடுமுறை இல்லாமல் கலந்து கொண்ட மாணவர்கள், ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்த மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேநேரத்தில் கேம்பிரேஜ், ஸ்டான்போர்டு, ஒக்ஸ்போர்ட், ஹர்வார்ட் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த 5 சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முத்தாய்ப்பாக பிரிக்பீல்ட்ஸ் பிடி3  சிறந்த 3 மாணவர்களுக்கு அதிரடிப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல்நிலை சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட மிரிநளினி சுப்பிரமணியத்திற்கு மடிக்கணினி வழங்கப்பட்டன. இரண்டாவது நிலை வெற்றியாளரான சுருதிஷா ஆனந்தனுக்கு சம்சோங் டேப் பரிசாக வழங்கப்பட்டது. இதில் மூன்றாவது நிலை வெற்றியாளர்  சூர்யா ராஜேந்திரனுக்கு  லெனொவோ டேப் பரிசாக வழங்கப்பட்டது.
         இந்நிகழ்வில் பிடி3 மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments