ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா! சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், வர்த்தகர் பிரான்சிஸ் இயூ, பத்மநாபன் தலா 5 ஆயிரம் வெள்ளி நன்கொடை! ஆலயத் தலைவர் ரவிநாத் நன்றி!

ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா!
சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், வர்த்தகர் பிரான்சிஸ் இயூ, பத்மநாபன் தலா 5 ஆயிரம் வெள்ளி நன்கொடை!
ஆலயத் தலைவர் ரவிநாத் நன்றி!

குணாளன் மணியம்

ரவாங், செப்.14-
          ரவாங் ஸ்ரீவீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற  விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் 5 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.
            ரவாங்கில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீவீரகத்தி விநாயகர் ஆலயத்தில்  தற்போது 10 லட்சம் வெள்ளி செலவில் திருப்பணி  நடைபெற்று வருகிறது.
இந்த திருப்பணி குறித்து விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆலயத் தலைவர் ரவிநாத் உரையாற்றுகையில்  கூறியிருந்தார். இதன் அடிப்படையில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் 5 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.

         அதேநேரத்தில் தொழிலதிபர் பிரான்சிஸ் இயூ, மலேசிய இந்து சங்கம் ரவாங் வட்டார பேரவைத் தலைவர் பத்மநாபன் ஆகியோரும் திருப்பணிக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினர்.
          இந்த நிகழ்வில் ரவாங் வட்டார பக்தர்களும் தங்களால் இயன்ற நன்கொடை வழங்கினர். நன்கொடை வழங்கிய அனைவருக்கும் ஆலயத் தலைவர் நன்றி கூறியதோடு ஆலய நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து கௌரவித்தார்.
         இந்த ஆண்டு ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக  ஆலயத் தலைவர் திரு.ரவிநாத் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.
      இந்த விநாயகர் சதுர்த்தி வைபவத்தில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், ஹெனிகேன் நிறுவனத்தின் அனைத்துலக வர்த்தக மற்றும் ஒருங்கிணைப்பு நிர்வாகி பிரான்சிஸ் இயூ, செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினர் சரவணன், மலேசிய இந்து சங்கம் ரவாங் வட்டார பேரவைத் தலைவர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments