சமூகவலைத்தளங்களில் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் மாண்புமிகு குலசேகரன்! வெ.50 மாத சம்பள உயர்வால் மக்கள் கொதிப்பு

சமூகவலைத்தளங்களில் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் மாண்புமிகு குலசேகரன்!
வெ.50 மாத சம்பள உயர்வால் மக்கள் கொதிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்டம்பர் 7-
       மக்களுக்கு 50 வெள்ளி சம்பள உயர்வு வழங்கியுள்ள மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரனுக்கு சமூகவலைத்தளங்களில் பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருவது தேசம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

          தேர்தலுக்கு முன்பு அதைச் செய்திறேன். இதைச் செய்கிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்த குலசேகரன், மனிதவள அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

 அடையாள அட்டை பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வு பிறக்கும் என்றார். இதுவரை நடக்கவில்லை. மக்களின் மாத சம்பளம் 1,500 வெள்ளியாக உயர்த்தப்படும் என்றார்.

 அதுவும் நடக்கவில்லை. மாத சம்பளம் 1,050 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்டப்புற மக்கள் நிலை கேள்வி குறியாகியுள்ளது. தேர்தல் வாக்குறுதி வெறும் வெற்று வாக்குறுதியாகி விட்டதாக காணொளி, குரல்பதிவு வழி மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து குலசேகரன் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.

Comments