சமூகநலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் இந்தியர் சிறப்பு உதவி நிதி இயக்கம் நடத்தும் "என்றும் இனிமை 7" நிதி திரட்டும் கலை இரவு! ஆதரவளிக்க செயலாளர் மேரி தாஸ் வேண்டுகோள்

சமூகநலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் இந்தியர் சிறப்பு உதவி நிதி இயக்கம் நடத்தும் "என்றும் இனிமை 7" நிதி திரட்டும் கலை இரவு!
ஆதரவளிக்க செயலாளர் மேரி தாஸ் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, செப்.20-
            இந்தியர் நலனுக்காக சமூகநலத் தொண்டுகளை எதிர்பார்ப்பு இல்லாமல் மேற்கொண்டு வரும் இந்தியர் சிறப்பு உதவி நிதி இயக்கம் ( PERTUBUHAN BANTUAN KHAS INDIA) (PBKKI) "இந்திய பாரம்பரிய கலை இரவு" எனும் சிறப்பு நிதி திரட்டும் நிகழ்வை நடத்தவிருப்பதாக அதன் செயலாளர் திருமதி டி. மேரி தாஸ் கூறினார்.

         இந்த "என்றும் இனிமை 7" எனும் கலைநிகழ்ச்சி செப்டம்பர் 29ஆம் நாள் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு கிளப் பிஜே, எண் 7, லோரோங் சுல்தான், 46200 பெட்டாலிங் ஜெயா (Kelab PJ ,No 7, Lorong Sultan, Petaling Jeya) எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.

இதன்வழி திரட்டப்படும் நிதி அடையாளம் காணப்பட்டுள்ள  தேவைப்படும் இந்திய மக்களுக்கு  உதவி நிதியாக வழங்கப்படும் என்று மேரி தாஸ் தெரிவித்தார்.
            இந்த இந்தியர் சிறப்பு உதவி நிதி இயக்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
5 முறை நிதி திரட்டும் நிகழ்வை நடத்தி உதவி தேவைப்படும் மக்களுக்கு வழங்கி வந்துள்ளது. டயாலிசிஸ் நோயாளி, கால், கண் பிரச்சினை உள்ளவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், கல்வி உதவி நிதி என்று ஆண்டுதோறும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தி எங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு நடத்தப்படும் நிகழ்வில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவி நிதி மேடையிலேயே உடனடியாக வழங்கப்படும் என்று அதன் தலைவர் முருகு எஸ்.முனியாண்டி சொன்னார்.
          இந்த நிகழ்வுக்கான விருந்து மேசைகள் தற்போது விற்பனையில் உள்ளன. இதனை வாங்கி ஆதரவு தர விரும்பும் மற்ற இயக்கங்கள், பொது அமைப்புகள், வர்த்தகர்கள், பொது மக்கள் ஆகியோர் விருந்து மேசைகளை வாங்கி ஆதரவு தரும்படி மேரி தாஸ் கேட்டுக் கொண்டார்.
          இந்திய மக்களில் பலர் மிகவும் மோசமான நிலையில் எந்த உதவியும் இல்லாமல் இருக்கின்றனர். இவர்களின் பிரச்சினைகளை ஓரளவுக்கு குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிதி திரட்டும் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்நிகழ்வுக்கு மக்களின் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இந்த நிகழ்வில் இந்திய பாரம்பரியம், கலாச்சாரத்தை மறக்கக் கூடாது என்பதற்காக கலாச்சாரம் சார்ந்த பல நிகழ்வுகளையும் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்நிகழ்வுக்கு வருகை தருபவர்கள் 60,70 ஆண்டு இந்திய பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். இதில் சிறந்த பாரம்பரிய உடைக்கு பரிசு காத்தி்ருக்கிறது. மேலும் சிறந்த பாரம்பரிய நடனம், உடனடி கேள்வி-பதில் ஆகியவற்றுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இதில் அதிர்ஷ்டக் குலுக்கும் உள்ளதால் விருந்து மேசைகளை வாங்கி ஆதரவு தரும்படி  மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு டி.மேரி தாஸ் -012-282 3002, சத்யா- 019-275  5244, விஜி- 016-656 3835, எனி-012-309 2014

Comments