பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு யாசியின் கலைஞர்கள் விருது விழா! அக்டோபர் 7ஆம் நாள் செந்தூல் எச்ஜிவி மாநாட்டு மண்படத்தில் நடைபெறும்

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு யாசியின் கலைஞர்கள் விருது விழா!
அக்டோபர் 7ஆம் நாள் செந்தூல் எச்ஜிவி மாநாட்டு மண்படத்தில் நடைபெறும்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.24-
           பல ஆண்டுகள் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இயங்காமல் இருந்த யாசி எனப்படும் மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியம் மீண்டும் "யாசி கலைஞர்கள் விருது விழா" எனும் புதிய நிகழ்வோடு உயிர்த்தெழுந்துள்ளது.

            இந்த "யாசி கலைஞர்கள்" விருது விழா அக்டோபர் 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை செந்தூல் எச்ஜிவி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக யாசி விருது விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சங்கமம் சுப்ரா என்ற எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
       மலேசியக் கலைஞர்கள், கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை ஒரு குடையின் கீழ் இணைக்கும் ஒரு அமைப்பாகும். இது கடந்த 1999இல் முன்னாள் மஇகா  தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சாமிவேலு ( துன் சாமிவேலு) அவர்களால் தொடங்கப்பட்டது.
           இது நடிகர், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்ட கலைஞர்களுக்காக இந்த அறவாரியம் அமைக்கப்பட்டது. இந்த அறவாரியத்தின் வழி நலிந்த கலைஞர்களுக்கு உதவி வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக கலைஞர்கள் மருத்துவமனை சேர்ப்பு, இறப்பு, மரண சகாய நிதி, இறப்பு காப்புறுதி ஆகியவை வழங்கப்பட்டன. நாட்டில் மிகவும் துடிப்போடு இயங்கி வந்த யாசி சில காலம் முடங்கிப் போனது. எனினும் தற்போது விருது விழாவோடு உயிர்த்தெழுந்துள்ளது.
            இந்த "யாசி கலைஞர்கள் விருது விழா" நிகழ்வில் 15 கலைஞர்களுக்கு பாராட்டு, 15 கலைஞர்களுக்கு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என்று வழங்கப்படவுள்ளது. இதில் 200 பக்கங்கள் அடங்கிய மலேசியக் கலைஞர்கள் கையேடும் வழங்கப்படவுள்ளன. இதுவொரு விருந்துடன்கூடிய ஒரு மாபெரும் இசை விழாவாக நடைபெறும் என்று சங்கமம் சுப்ரா குறிப்பிட்டார்.
            இந்த  "யாசி கலைஞர்கள் விருது விழா" நிகழ்வில் பங்கேற்க விரும்பும் விளம்பரதாரர்கள், விருந்து மேசை வாங்கி ஆதரவளிக்க விரும்புகிறவர்கள்,  கலைஞர்கள் ஆகியோர் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொன்.கோகிலம்-010-225 4974, சங்கமம் சுப்ரா- 016-331 0288.

Comments