இறை பக்தியினூடே மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆலோசனை

இறை பக்தியினூடே மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்!
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆலோசனை

கிள்ளான், செப். 12-
          மாணவர்கள் இறைபக்தியினூடே கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப பினர் ஜி.குணராஜ் கூறியுள்ளார்.


          கல்விக்கு பக்தியும் அவசியம்தான். இந்த இறை பக்தியானது மாணவர்களை நெறிப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த உதவும் என்று செந்தோசா சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வி யாத்திரை நிகழ்வில் கலந்து கொண்ட போது தேசம் வலைத்தளத்திடம் அவ்வாறு தெரிவித்தார்.        மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய குணராஜ்,, மாணவர்கள் எதிர்கால தூண்கள் என்றும் இந்திய சமுதாயத்தின் முதுகெலும்பு என்றும்  மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் கடமையை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.


          அருளொளி சாகம்பரி திட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் வட்டார பொது இயக்கங்களின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த கல்வி யாத்திரையில் நூற்றுக்கணக்கான யூபிஎஸ்ஆர், பிடி3, எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்றனர்.
            இந்த நிகழ்வில் வட்டார பொது இயக்கங்கள், ஆலய நிர்வாகங்கள், சட்டமன்ற அலுவலக பணியாளர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments