விநாயகர் சதுர்த்தியில் விடியல் பிறக்கட்டும்! மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியில் விடியல் பிறக்கட்டும்!
மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், செப்.12-
           விநாயகர் சதுர்த்தியில் வீரிய சிந்தனையோடு சமுதாய ஒற்றுமையை கடைபிடிப்போம் என்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் மஇகா தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
           இந்துக்கள் விநாயகப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் மலரும் சதுர்த்தியில் 'விநாயகர் சதுர்த்தி" விழாவை கொண்டாடுகிறார்கள். நம் தாய்நாடான தமிழ்நாட்டில் இந்துக்கள் மிகவும் கோலாகலமாக " விநாயகர் சதுர்த்தி" விழாவை கொண்டாடுகின்றனர். விநாயப் பெருமான் மூலக்கடவுள் என்பதால் இந்துக்கள் அவருக்கு முதல் மரியாதையை வழங்கி வணங்குகின்றனர். விநாயப் பெருமான்  எல்லா நாளிலும் நினைத்ததை நடத்திக் கொடுப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்பையாகும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
         "விநாயகர் சதுர்த்தி" போன்ற   சமய விழாக்கள் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு விழாவாகும். இந்நன்னாளில் இந்துகள் பல இன இந்தியர்களுடன் ஒற்றுமையாக இருந்து உபசரிப்புகள் நடத்தி ஒற்றுமையாகக் கொண்டாட வேண்டும்.
          நாடு தழுவிய நிலையில் ஆலயங்களில் குறிப்பாக விநாயகர் ஆலயங்களில் விஷேச கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த நன்னாளி இந்துகள் ஆலயங்களில் ஒன்றுகூடும் போது ஒருவரை ஒரு பார்த்து, சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதன் வழி ஒற்றுமை மேலோங்கும். எல்லா வல்ல விநாயப் பெருமான் சதுர்த்தி நன்னாளில் நல்லாசி வழங்க எம்பெருமானை வேண்டிக் கொள்வதாக  குறிப்பிட்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்  அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments