ஒருங்கிணைந்த அரசு இயக்கங்கள், மலேசிய நண்பன் நாளிதழ் இணை ஏற்பாட்டில் "தமிழன் விருது விழா" தொண்டர்களை கௌரவிக்கும் மாபெரும் விழா

ஒருங்கிணைந்த அரசு இயக்கங்கள், மலேசிய நண்பன் நாளிதழ் இணை ஏற்பாட்டில் "தமிழன் விருது விழா"
தொண்டர்களை கௌரவிக்கும் மாபெரும் விழா

கோலாலம்பூர், செப்.13-
           மலேசியாவில் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் பொதுநலத் தொண்டாற்றிய நல்லுள்ளங்களை கௌரவிக்கும் பொருட்டு தமிழன் விருது விழா ஒருங்கிணைந்த அரசாங்க சார்பற்ற பொது இயக்கங்கள், மலேசிய நண்பன் நாளிதழ் இணை ஏற்பாட்டில் நடைபெறவிருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பி.டி.கானா கூறினார்.

           மலேசியாவில் கலைஞர்கள், சாதனையாளர்களுக்கான விருது விழா அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆனால், பொதுநலத் தொண்டர்களுக்கும் மக்கள் தொண்டர்களுக்கும் அங்கீகார விருகள் வழங்கப்படுவது மிகவும் குறைவு.


அந்த வகையில் அரசாங்க சார்பற்ற பொது இயக்கங்களின் இணை ஏற்பாட்டில் "தமிழன்  விருது விழா" செப்டம்பர் 15ஆம் நாள் சனிக்கிழமை இரவு 7.00 மணி தொடங்கி இரவு 11.00 மணிவரையில் இந்த தமிழன் விருது விழா நடைபெறவிருப்பதாக பி.டி.கான தெரிவித்தார்.
           இந்த விருது விழாவிற்கு சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு வீ.கணபதிராவ், செந்தூல் உதவி கமிஷனர் முனுசாமி, சபாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு காமாட்சி ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்ளவிருப்பதாக நிகழ்ச்சியின் மற்றொரு  ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் சொன்னார்.

          இந்த கௌரவிப்பு விழாவில்  10 துறைகளில் தொண்டாற்றியுள்ள மொத்தம் 20 பேருக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த தமிழன் விருது விழா இலவசமாக கோலாலம்பூர் டிபிகேஎல் மண்டபத்தில் நடைபெறவிருப்பதால் மக்கள் அனைவரும் திரளாகக் கலந்து ஆதரவு தரும்படி உமாகாந்தன், பி.டி.கானா இருவரும் கேட்டுக் கொண்டனர். தொடர்புக்கு பி.டி.கானா- 016-6120616, உமாகாந்தன்-016-244 7487 டிக்காம்- 017-2121410

Comments

Post a Comment