தீமிதி திருவிழா காணும் பத்து கவான் மகா முத்துமாரியம்மன் ஆலயம் விநாயகர் சதுர்த்தியில் பூட்டப்பட்டது!

தீமிதி திருவிழா காணும் பத்து கவான் மகா முத்துமாரியம்மன் ஆலயம் விநாயகர் சதுர்த்தியில் பூட்டப்பட்டது!

மு.வ.கலைமணி.
பத்து கவான், செப்.13,
        பத்து ஆண்டுகால ஆலய பிரச்சனைகளுக்கு  நீதிமன்ற வழக்கின் இறுதி தீர்ப்பே முடிவாகும் என்ற நிலையில்,  எகோவல் நில உரிமையாளர்களுக்கு எதிராக நடத்தி வரும் அத்தோட்ட பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த ஆலய நிர்வாகத்தினருக்கு பல வகையில் இடையூறுகள் தந்து வழக்கின் தீர்ப்புக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில் 20.9.18 மீண்டும் ஒரு மனு சார்வு செய்து ஆலயத்தை முழுதாக பூட்டிடும் நடவடிக்கை இன்று நண்பகலில் நடந்தேறவிருந்ததை ஆலய நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர்.

         ஆலய சார்பாக வழக்காடி வரும் அகிலன் வழக்கறிஞர் நிறுவனம் இன்று காலையில் மேற்கொண்ட நீதிமன்ற மனு சார்வின் வழியும் நில வழக்கறிஞரிடம் ஆலய வளாகத்தில் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் வழியும், ஆலயத்தை பூட்டிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
        தகவல் அறிந்து ஆலய வளாகத்தில் கூடிய நூறுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இந்நடவடிக்கையானது மிக வேதனையை தந்தது.  விநாயகர் சதுர்த்தியான இன்று  ஆலயத்தை மூடுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் நளை மறுநாளான 15 ஆம் தேதி ஆண்டு தீமிதி திருவிழா நடைபெறுகின்ற வேளையில் இத்தகைய  விரும்பத்தகாத செயல்களில் நில உரிமையாளர்கள் ஈடுபடுவதன் காரணம் என்னவென்று அவர்கள் வினவினர்.
       இன்னும் ஒரு வாரத்தில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னே ஏன் இந்த நடவடிக்கையில் இறங்க வேண்டும் என ஆலயத் தலைவர் கோ.மனோகரன் மற்றும் செயலாளர் சூ.இராமலிங்கம் கேள்வி எழுப்பினர்.
            இதனிடையே, நில உரிமையாளர்கள் எங்கள் நிர்வாகத்திடம் இதுவரை எந்தவொரு மாற்று பரிந்துரைகளையும் வைத்து பேச முன்வரவில்லையென ஆலயத்தின் அறங்காவலர் மு.வீ.மதியழகன் தெரிவித்தார்.

Comments