"பல்வேறு இனங்களிடையே தோன்றும் நாட்டுப் பற்று"

"பல்வேறு இனங்களிடையே தோன்றும் நாட்டுப் பற்று"

பினாங்கு, செப்.15-
            மலேசிய தினத்தை முன்னிட்டு பினாங்கு இந்து சங்கத்தின் பெறும் முயற்சியில் நம் நாட்டில் உள்ள இனங்களிடேயே தோன்றிய நாட்டுப் பற்று பற்றிய ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
           கடந்த காலங்களில் இது சம்பந்தமான பல ஆய்வுகள் மேற்கொண்டு, பல புத்தகங்கள் வெளியீடு செய்த சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு இவ்வாய்வரங்கில் சொற்பொழிவுகள் வழங்கவுள்ளனர்.
இந்த ஆய்வரங்கம்  16-9-2018 ஞாயிற்றுக்கிழமை 'மலேசிய தினத்தன்று' பினாங்கு கொம்தாரில் 3ஆவது மாடியில் 'சி'அரங்கில் மாலை 4.00 மணிக்கு நடைபெறும். பொது மக்கள் திரளாக இதில் கலந்து பயன் பெறும்படி சங்கத்தின் தலைவர் ப.முருகையா கேட்டு கொண்டார். மேல் விபரங்களுக்கு - 016 4449246 ,  டாக்டர் பாலசுப்பிரமணியம் 012- 4342536.

Comments