பத்து கவான் தோட்ட ஆலய நிர்வாகதிற்கு எதிராக தொடுத்த வழக்கில் நில உரிமையாளர்கள் தோல்வி! அன்னை மகா மாரியம்மனுக்கு வெற்றி!

பத்து கவான் தோட்ட ஆலய நிர்வாகதிற்கு எதிராக தொடுத்த வழக்கில் நில உரிமையாளர்கள் தோல்வி!
அன்னை மகா மாரியம்மனுக்கு வெற்றி!

மு.வ.கலைமணி

        பத்து கவான், செப்.20-
          இருநூறு ஆண்டு கால வரலாற்றுப் பதிவைக் கொண்ட, பாட்டாளிகளின் சொத்தான பத்து கவான் தோட்ட அருள்மிகு  ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றும் நோக்கில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு இன்று காலையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில்  நடந்தது.
          இந்த விசாரணையின் தீர்ப்பின் வழி நில உரிமையாளர்கள் தோல்வியைத் தழுவினர். ஆலய நிர்வாகத்திற்கு பல நெருக்குதல்களை தந்து, சொந்தமாக அவ்விடத்தை விட்டு போகின்ற வழிவகைகளை வகுத்து  தோல்விக் கண்ட மாநில அரசின் மேம்பாட்டு நிறுவனம், இந்து அறப்பணி வாரியம்,  ஏகோவெல் எனும் நில உரிமையாளர்கள் ஆகிய பெரும் பலம் கொண்ட நிறுவனங்கள் இந்த ஆலயத்தை அகற்றும் பணியை நீதிமன்ற வழக்கின் மூலம் சந்திக்க செய்தன.
       சுமார் மூன்று வழக்கின் தீர்ப்பில் இருமுறை ஆலயமும் ஒரு முறை நில உரிமம் பெற்ற நிறுவனமும் வெற்றி பெற்றது.
இறுதியாக இவ்வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆலய வழக்கறிஞர் மூலம் மீண்டும் சார்வு செய்யப்பட்டு இன்று தீர்ப்பு ஆலயத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
      இவ்வழக்குகளில் ஆலய சார்பாக வாதாடிய அகிலன் வழக்கறிஞர் நிறுவனத்தின் பிரபல வழக்கறிஞர் அகிலன் ஆதி முதற்கொண்டு பல நுனுக்கங்கள் தனது வாதத்திறமையால் வெற்றியடைய செய்ததோடு இப்போது இறுதி தீர்ப்பின் வெற்றிக்கும் பெறும் பங்காற்றியுள்ளார்.
       வழக்கறிஞர் அகிலன் மேற்கொண்ட பல வழக்குகள் பெறும் வெற்றிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு பேருதவியாக  இருந்து இவ்வழக்கு வெற்றிபெற உதவியவர் துணையாளர் திரு. குணா என ஆலய செயலாளர் சூ.இராமலிங்கம் புகழாரம் சூட்டினார்.
ஆலய அறங்காவலர் மு.வீ.மதியழகனின் அயராத முதற்சியினாலும் கொண்ட கொள்கையினாலும் இவ்வழக்கில் நாங்கள் வெற்றிப்பெறும் வேட்கையை அடைந்ததாக ஆலயத் தலைவர் மணோகரன் மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்தார்.

Comments