தனித்திறன் கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடும் திறன் போட்டி! தமிழ்க் கலைஞர் குரல் அமைப்பு நடத்துகிறது! தலைவர் பாலந்தர் தகவல்

தனித்திறன் கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர்  பாடும் திறன் போட்டி!
தமிழ்க் கலைஞர் குரல் அமைப்பு நடத்துகிறது!
தலைவர் பாலந்தர் தகவல்

       தேசம் குணாளன்     
              மணியம் 

கிள்ளான், செப்.12-   
       தனித்திறன் கொண்ட சிறுவர்களின் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடும் திறன் போட்டி நடத்தப்படவிருப்பதாக அதனை ஏற்று நடத்து தமிழ்க் கலைஞர் குரல் அமைப்பின் தலைவர் பாலசந்தர் கூறினார்.
           ஒரு காலத்தில் தமிழ்ப்பள்ளி மட்டுமன்றி அனைத்து பள்ளிகளில் இசைப் பாடம் நடத்தப்பட்டது. ஆனால், அந்தப் பாடம் இப்போது இல்லை. இதில் குறிப்பாக சிறு வயதில் இசை நாட்டம் கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இசைத் திறனை குறிப்பாக பாடும் திறமையை வெளிக்கொணரும் ஒரு தளமாக தமிழ்க் கலைஞர் குரல் அமைந்துள்ளதாக ஜூனியர் சூப்பர் சிங்கர் அறிமிகவிழாவில் பாலச்சந்தர் தெரிவித்தார்.
         தமிழ்க் கலைஞர் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 2016இல் சிலாங்கூரில் உள்ள 8 தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை சங்கீத பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2017இல் மானியம் கிடைக்காததால் சங்கீத வகுப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இந்நிலையில் 2017இல் கிடைத்த மானியத்தில் சங்கீத வகுப்பு தொடரப்பட்டது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான முறையில் சங்கீத வகுப்பு நடத்தப்பட்டு தற்போது அவர்களுக்கான பாடும் திறன் போட்டி நவம்பர் 18ஆம் நாள் நடத்தப்படவிருப்பதாக பாலச்சந்தர் சொன்னார்.
          இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடும் திறன் போட்டி பள்ளி அளவில் நடத்தப்பட்டு, பிறகு நவம்பர் 18ஆம் நாள் ஷா ஆலம் மிண்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் அரையிறுதி சுற்றும் பிறகு இறுதிச் சுற்றும் நடைபெறும். இறுதிச் சுற்றில் மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள். இதில் முதல்நிலை வெற்றியாளருக்கு 1500 வெள்ளியும் இரண்டாவது நிலை வெற்றியாளருக்கு ஆயிரம் வெள்ளியும் மூன்றாவது நிலை வெற்றியாளருக்கு 500 வெள்ளியும் வழங்கப்படும். அதேநேரத்தில் 4 முதல் 10 வரையிலான போட்டியாளருக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும். எல்லா போட்டியாளருக்கும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும் என்று பாலசந்தர் குறிப்பிட்டார்.
        இதுகுறித்த மேல்விவரங்களுக்கு 012-3544146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments