அஸ்ட்ரோவில் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் புதிய அலைவரிசைகள்! மலேசிய கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்! டாக்டர் ராஜாமணி செல்லமுத்து தகவல்

அஸ்ட்ரோவில் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் புதிய அலைவரிசைகள்!
மலேசிய கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்!
டாக்டர் ராஜாமணி செல்லமுத்து தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.24-
          அஸ்ட்ரோவில் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் அலைவரிசைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அலைவரிசைகள் தற்போது 232, 233 ஆகிய அலைவரிசைகளில் ஒரு மாதத்திற்கு இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகள் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி கூறினார்.
         இந்த அலைவரிசைகளில்

மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் தமிழ் நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், போட்டிகள், சமயல் கலை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளியேறும் என்று அலைவரிசைகள் அறிமுக விழாவில் டாக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
           மலேசியாவில் 89 விழுக்காடு இந்தியர்கள் வீடுகளில் ஊடுருவியுள்ள அஸ்ட்ரோ அவர்களின் பொழுது போக்குத் தேவைகளை பூர்த்தி செய்ய ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் அலைவரிசைகளை கொண்டு வந்துள்ளதாக டாக்டர்  ராஜாமணி சொன்னார்.
          இந்த இரு அலைவரிசைகளில் தொடர் நாடகங்கள், சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி, நகைச்சுவை நிகழ்வு என்று முழுக்க முழுக்க தமிழ்நாட்டு சினிமா பிரபலங்கள், பாடகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளுயேறும் என்றார் டாக்டர் ராஜாமணி.
           இந்த இரு அலைவரிசைகள் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 28ஆம் நாள் வரையில் இலவசமாக வழங்கப்படும். இதன் பிறகு அஸ்ட்ரோ பேமிலி பேக், வெலியு பேக், ஸ்டாடர் பேக் ஆகிய சந்தாதாரர்களுக்கு 10 வெள்ளி கூடுதல் கட்டணத்திலும் அஸ்ட்ரோ சூப்பர் பேக், சூப்பர் பேக் லைட் சந்தாதாரர்களுக்கு 6 வெள்ளி கூடுதல் கட்டணத்திலும் அஸ்ட்ரோ சூப்பர் பேக் பிளஸ் சந்தாதாரர்களுக்கு 3 வெள்ளி கூடுதல் கட்டணத்திலும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments