மலேசிய இந்தியர்களின் பரம்பரை தொழில் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை! அரசாங்கம் கவனிக்குமா? மைக்கி தலைவர் டீன்ஸ்ரீ கே.கே ஈஸ்வரன் கேள்வி

மலேசிய இந்தியர்களின் பரம்பரை தொழில் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை!
அரசாங்கம் கவனிக்குமா?
மைக்கி தலைவர் டீன்ஸ்ரீ கே.கே ஈஸ்வரன் கேள்வி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.28-
            மலேசியாவில் இந்தியர்களின் பரம்பரை  தொழில் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இதுகுறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழிலியல் சம்மேளனத் தலைவர் டான்ஸ்ரீ கே.கே ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
         இந்நாட்டில் இந்தியர்கள் ஜவுளி, உணவகம், முடிதிருத்துதல் உள்ளிட்ட பல பரம்பரை தொழில்களை இந்தியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 இவர்கள் அனைவரும் தொழிலாளர் பற்றாக்குறையால் வாழ்வா? சாவா? நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ கே.கே ஈஸ்வரன் தெரிவித்தார்.

          இந்நாட்டில் 3 ஆயிரம் முடிதிருத்தும் கடைகளை இந்தியர்கள் நடத்தி வருகுன்றனர். இந்திய உணவகங்கள் 5 ஆயிரம் உள்ளன.
இந்திய முஸ்லீம் உணவகங்கள் மொத்தம் 10 ஆயிரம் இருக்கின்றன. அதேநேரத்தில் 3,500 ஜவுளி கடைகளை இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் பற்றாக்குறையினால் கடையை இழுத்து மூடும் நிலைக்கு வந்துள்ளதாக டான்ஸ்ரீ ஈஸ்வரன் சொன்னார்.
           இந்த இந்திய பரம்பரை தொழில் சார்ந்த துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறைதான் மேலோங்கி இருக்கிறது. இதில் சில துறைகளுக்கு தொழிலாளர் தருவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில துறைகளுக்கு தொழிலாளர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை இரண்டாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.  இதனை இப்படி செய்தால் கண்டிப்பாக தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியாது என்று டான்ஸ்ரீ கே.கே ஈஸ்வரன் கூறினார்.
          இந்திய வர்த்தகர்கள் எந்த வர்த்தகமாக இருந்தாலும் கடைகளை  வாடகைக்கு எடுத்துதான் நடத்துகின்றனர். இந்த வாடகையை முறையாக செலுத்த வேண்டும். இந்த வாடகையை செலுத்த வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும். இதற்கு தொழிலாளர்கள் முறையாக இருக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
        அதேநேரத்தில் வேலை முடிந்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு பதில் மாற்றுத் தொழிலாளர்களை வழங்கவும் அவர்கள் மறுக்கிறார்கள் என்றார் அவர்.
            இதனிடைய ஜவுளி துறையில் தொழிலாளர் பற்றாக்குறை மேலோங்கியுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஜவுளி சங்கங்களின் செயலாளர் திருமதி மகேஸ்வரி தெரிவித்தார்.
         இப்பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். ஜவுளித் துறைக்கு தொழிலாளர் தருவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இல்லா விட்டால் ஜவுளித் துறை பெருமளவில் பாதிக்கப்படும் என்று மகேஸ்வரி எச்சரித்தார்.
        இந்திய பரம்பரை தொழில் தொழிலாளர் பற்றாக்குறையினால் பெருமளவில் பாதிகப்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையினால் பல உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
           மலேசியாவில் முடிதிருத்தும் கடைகளும் தொழிலாளர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் வி்ரைந்து தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மலேசிய சிகையலங்கரிப்பாறர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன் கேட்டுக் கொண்டார்.

Comments