டோமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிதிக்கு ஏகே கோ கார்ட் ரேசிங் போட்டி! பா.தேவேந்திரன் தகவல்

டோமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிதிக்கு ஏகே கோ கார்ட் ரேசிங் போட்டி!
பா.தேவேந்திரன் தகவல்

 கோலாலம்பூர், செப்.27-
    செமினி டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிதிக்காக மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கோ கார்ட் ரேசிங் போட்டி செர்டாங் ரேசர்கார்டிங் மெப்ஸ்சில்  நடத்தப்பட்டதாக அதன் தலைவர பா.தேவேந்திரன் கூறினார்.

      இந்த ஏகே கோ கார்ட் போட்டி காலை 11.00 மணி தொடங்கி 3.00 மணிவரையில் நடைபெற்ற இப்போட்டியில் டோமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என்று சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் சிலர் கோ கார்ட் வண்டியை ஓட்டிப் பார்த்து மகிழ்ந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 400 வெள்ளியும் இரண்டாவது பரிசாக 200 வெள்ளியும் 100 வெள்ளியும் வழங்கப்பட்டன. மேலும் வெற்றியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
        இந்நிகழ்ச்சிக்கு மலேசிய தல அஜித் ரசிகர் மன்றத்துன் உறுப்பினர்கள் நிதி வழங்கி பிரதான ஆதரவாளராக இருந்தனர்.  மேலும் மாலிக் ஸ்டிரீம்ஸ் டத்தோ மாலிக், இணை ஆதரவாளர்களாக மலேசிய இயக்குநர்கள் சங்கம் பென்ஜி, யுனிடென் மோட்டோஸ்போர்ட் திரு.மதி, கேடிசிக்ஸ் கம்யூனிகேசன், கிள்ளான் மாவட்ட செம்பிறைச் சங்கம், எச் கார் தோவிங் அலகேந்திரா மற்றும் மலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், தேவா ஏஆர்ஆர், ஸ்ரீ ராசி சில்க் சென்டர் ஆகியோரின் ஒத்துழைப்பில் நடைபெற்றதாக தேவேந்திரன் தெரிவித்தார்.
           இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட ஆயிரம் வெள்ளி நிதி டோமினியடன் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதில்  சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

Comments