சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் பசுமையான நினைவுகள்! ஒன்றுகூடல் நிகழ்வில் பரிமாற்றம்

சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் பசுமையான நினைவுகள்!
ஒன்றுகூடல் நிகழ்வில் பரிமாற்றம்

சுங்கை பூலோ, செப்டம்பர் 3-
         சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் பலர் தங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


           கடந்த செப்டம்பர் 2ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் 1965இல் பிறந்து, 1972ஆம்  ஆண்டு ஆரம்ப கல்வியை தொடங்கி  1977ஆம் 6ஆம்  ஆண்டை முடித்து கொண்டனர்.

அதன்பிறகு இடைநிலைப்பள்ளிக்கு சென்ற அந்த பசுமையான பழைய நினைவுகளை சுங்கை பூலோ தோட்ட தமிழ் பள்ளியில் மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள்  மாணவர்கள் 15 பேருக்கு மேற்பட்டவர்கள் பல சிரமங்களுக்கிடையில்   கணவன் மனைவி பிள்ளைகளுடன்  கலந்து கொண்டு பரிமாறிக் கொண்டதாக  கோலசிலாங்கூர் தோட்ட தமிழ்பள்ளி முன்னாள் மாணவர் வீ.கோபி சொன்னார்.
            இந்த ஒன்றுகூடல் நிகழ்வில்  நண்பர்கள் பலர் கூறிய கருத்துகளை அனைவரும் ஒன்று சேர்ந்து  நிறைவேற்றுவோம். இதனை நிறைவேற்ற
அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நாம் அனைவரும் பல சிரமங்களுக்கிடையில் ஒன்றுகூடி இருக்கிறோம். இதற்காக ஆங்காங்கே நண்பர்களை தொடர்பு கொண்டு இனைத்தவர்  சுங்கை பூலோ தோட்ட தமிழ்பள்ளி முன்னாள் மாணவர் திரு. உலகநாதன். இந்த வேளையில் அவருக்கு எங்களுடைய பாராட்டுகளையும் நன்றியையும் இவ்வேலையில் தெரிவித்துக் கொள்வதாக வீ. கோபி குறிப்பிட்டார்.

Comments