போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் மஇகா களமிறங்காது!தலையிடாது! டான்ஸ்ரீ எஷ்.ஏ.விக்னேஷ்வரன் திட்டவட்டம்

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் மஇகா களமிறங்காது!தலையிடாது!
டான்ஸ்ரீ எஷ்.ஏ.விக்னேஷ்வரன் திட்டவட்டம்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.13-
            போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மஇகா களமிறங்காது அதேநேரத்தில் தலையிடாது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.
          போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அம்னோ தனது வேட்பாளரை நிறுத்தி களம் காணட்டும். நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்று  மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமையேற்ற போது செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
        போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கு சொந்தமானது என்றாலும் மஇகா கருத்து சொல்வதற்கு முன்பு அம்னோ துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் இருவரும் அத்தொகுதியில் அம்னோ வேட்பாளரை நிறுத்தும் என்று சொல்வி விட்டார்கள். ஆகையால், இத்தொகுதியில் அம்னோ களம் காணட்டும். இதில் மஇகா ஒரு போதும் தனது வேட்பாளரை களமிறக்காது. அதேநேரத்தில் இந்த இடைத்தேர்தலில்  தலையிடாது என்று மத்திய செயலவை கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.
          இப்படி சொல்வதன் வழி மஇகா தேசிய முன்னனியில் இருந்து விலகுகிறது என்று அர்த்தமல்ல. மாறாக மஇகா இனி தனிச்சையாக அதற்கு சரி என்று பட்டதை மத்திய செயலவையினரின் ஆதரவில் சுயமாக முடிவு செய்யும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
           மஇகாவுக்கு தேவைப்படுமானால் சூழலுக்கு ஏற்ப மத்திய செயலவையின் ஆதரவில் அதிரடி முடிவுகளைச் செய்யும் என்று மேலவை உறுப்பினருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments