நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை! தமிழர் சங்கம் மலேசியா குரல் கொடுக்கும்! தலைவர் ஜனா அறிவிப்பு

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை!
தமிழர் சங்கம் மலேசியா குரல் கொடுக்கும்!
தலைவர் ஜனா அறிவிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 7-
            நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி பீடத்தில் அமர்ந்த போதிலும் மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால் தமிழர் சங்கம் மலேசியா இதுகுறித்து குரல் எழுப்பும் என்று அதன் தலைவர் ஜனா கூறியுள்ளார்.
         அரசாங்க சார்பற்ற நிறுவனமாக இருந்து கொண்டு மக்கள் மேம்பாட்டுக்காக குரல் எழுப்பி வந்த தமிழர் சங்கம் மலேசியா புதிய தோற்றத்தில் தமிழர் சங்கம் மலேசியா எனும் புதிய பெயரில் தனது பயணத்தை தொடரவிருக்கிறது.   
          நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் மக்களுக்கான எந்த மாற்றத்தையும்  பார்க்கவில்லை என்றும் மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றும் ஜனா தெரிவித்தார்.
            தமிழர் சங்கம் மலேசியா மறுஅவதாரம் எடுத்து  மக்களுக்காக குரல் எழுப்பவிருக்கிறது. கடந்த 2012 தொடங்கி இன்றுவரையில் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் தமிழர் சங்கம் மலேசியா மக்கள் பிரச்சினைகளை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு சென்று தீர்வு காண முயற்சி மேற்கொள்வோம் என்று ஜனா சொன்னார்.
         தமிழர்  சங்கம் மலேசியா புதிய சின்னத்தில் நீண்ட புதிய  பயணத்தை மக்களுக்காக தொடங்கவிருக்கிறது. இச்சங்கத்தின் தலைவராக ஜனா பணியை தொடர்கிறார். துணைத் தலைவராக ரவி செயல்பட்டு வருகிறார். தமிழர் சங்கம் மலேசியா புதிய குழுவோடு செயல்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு -
1tamilanz4usangam@gmail.com

Comments