ராகாவின் ‘இதுதான் மலேசியா’ குறும்படம்

ராகாவின் ‘இதுதான் மலேசியா’ குறும்படம்

கோலாலம்பூர், செப்டம்பர் 6-
         தேசிய தினத்தையொட்டி  நாட்டின் சிறப்புகளை பல கோணங்களில் சித்தரிக்கும் காணொளிகளை சமூக வளத்தளங்களில் காணலாம். அவ்வகையில், இவ்வாண்டு தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் ராகா இதுதான் மலேசியா எனும் ஒரு குறும்படத்தைத் தங்களுடைய அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ளார்கள்.
10 வருடங்கள் கழித்து தன்னுடைய தாய் மண்ணான மலேசியாவிற்கு திரும்பும் ஒரு இளைஞரின் கதையுடன் தொடங்கும் இக்குறும்படத்தில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும் உதயாவுடன் இணைந்து இன்னும் பல புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.
7 நிமிடம் 17 வினாடிகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தில் மததால், இனத்தால் மற்றும் மொழியால் வேறுபட்டிருந்தாலும் மலேசியாவில் அனைவரையும் ஒன்று இணைக்கும் உணவு எனும் விஷயத்தை மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
அண்மையில், இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ராகா நடத்திய ‘மை மலேசியா’ எனும் குறும்படப் போட்டியின் வெற்றியாளர் டாக்‌ஷன் இயக்கியுள்ளார்.
இக்குறும்படத்தை https://www.facebook.com/RAAGA.my/videos/629491327444359/ அகப்பக்கத்தில் கண்டு களிக்கலாம்.

Comments