*இந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சி யுடன் மிஃபா நட்புமுறை காற்பந்தாட்டம்!* *இன்று இரவு நடைபெறுகிறது!* *சமுதாய பெருமக்களே திரளுங்கள்* *டத்தோ டி.மோகன் அழைப்பு*

*இந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சி யுடன் மிஃபா நட்புமுறை காற்பந்தாட்டம்!*
*இன்று இரவு நடைபெறுகிறது!*
*சமுதாய பெருமக்களே திரளுங்கள்*
*டத்தோ டி.மோகன் அழைப்பு*

கோலாலம்பூர், செப்டம்பர் 4-
       இந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சியுடன் மிஃபா அணி  அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் களம் காண்கிறது. இந்த ஆட்டத்தைக்காண இந்திய சமுதாய பெருமக்களோடு, இங்கு பணிபுரியும்  தமிழக உடன்பிறப்புகளும் திரளாக கலந்து கொள்ளுமாறு  மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
       இந்த நட்புமுறை காற்பந்தாட்டம்  இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை  இரவு 9.00 மணியளவில் கிளானாஜெயா எம்.பி.பி.ஜே திடலில் நடைபெறுகின்றது.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரையில் இரண்டு அணிகளுக்கிடையே ஒரு நல்லுறவை மேம்படுத்துவதோடு, இரண்டு நாடுகளுக்குமிடையில் காற்பந்து துறை சார்ந்த வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
சென்னையின் எப்.சி அணியைப் பொறுத்தவரையில் இந்திய சூப்பர் லீக் ஆட்டத்தின் சாம்பியனாக  இரண்டு முறை வெற்றி வாகை சூடியுள்ளது. அதோடு எ.எப்.சி கிண்ணப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளது.
       அந்த வகையில் இந்த ஆட்டம் நமது வீரர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும் என மிஃபாவின் தலைமைப் பயிற்றுநர் கே.தேவன் கூறியுள்ளார்.
      இந்த ஆட்டத்தைக்காண  சமுதாய உணர்வோடு நம்மவர்கள் திரள வேண்டும்.அனுமதி இலவசம். நம்மவர்கள் நமது அணிக்கு ஆதரவளிக்க  முன் வர வேண்டுமென அணியின் நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜன், செயலாளர் அன்பானந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
     மிஃபா அணியுடன் விளையாடவிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னையின் எப்.சி அணியின் தலைமைப்பயிற்றுநர் ஜான் கூறினார்.
      ஒரு சரித்திரமிக்க நட்புமுறை ஆட்டத்தைக்காண நம்மவர்கள் திரள வேண்டும்.

Comments