மனிதவள அமைச்சின் எச்ஆர்டிஎப்பில் பணியாற்றும் இளஞ்செழியனுக்கு கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் என்ன வேலை? எச்ஆர்டிஎப்பை தூங்க வைத்து விட்டாரா?

மனிதவள அமைச்சின் எச்ஆர்டிஎப்பில் பணியாற்றும் இளஞ்செழியனுக்கு கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் என்ன வேலை?
எச்ஆர்டிஎப்பை தூங்க வைத்து விட்டாரா?

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.14-
         மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் எச்ஆர்டிஎப்பிற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள இளஞ்செழியனுக்கு கல்வி அமைச்சில் துணை கல்வியமைச்சருடன்  நடந்த தமிழ்ப்பள்ளி கூட்டத்தில் என்ன வேலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
            மனிதவள அமைச்சின் கீழ் நடத்தப்படும் தொழில்திறன் பயிற்சி நடவடிக்கைகள்  விசாரணை எனும் பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்று ஆராயாமல் தமக்கு தொடர்பே இல்லாத கல்வி அமைச்சின் துணை கல்வியமைச்சருடனான கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வருத்தமளிப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத தொழில்திறன் நடத்துநர்கள் சிலர் தேசம் வலைத்தளத்திடம் கூறியுள்ளனர்.
           இந்த தொழில்திறன் பயிற்சி தேர்தலுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்து ஆட்சி மாறியதால் விசாரணை எனும் பெயரில் அப்பயிற்சிகள் நிறுத்தப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
          மனிதவள அமைச்சர் குலசேகரன் தேசிய முன்னனி ஆதரவில் இருந்த இளஞ்செழியனை அமைச்சர் குலசேகரன் எச்ஆர்டிஎப் தலைமை பொறுப்புக்கு நியமித்திருந்தார். ஆனால், அப்பதவி நற்காலியை மட்டும் சூடேற்றிக் கொண்டிருக்கும் இளஞ்செழியன் தொழில்திறன் நடத்துநர்கள் குறித்து துளியும் அக்கறை காட்டவில்லை. பல தொழில்திறன் கல்லூரிகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிந்திருந்தும் அதுகுறித்து கவலைப்படாமல் சம்பந்தமில்லாமல் தமிழ்ப்பள்ளி கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் தொழில்திறன் நடத்துநர்கள் சந்திக்கலாமே என்று பலர் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டினர்.
          இந்த தொழில்திறன் பயிற்சி கல்லூரிகள் குறித்து நன்கு ஆய்வு செய்து மேல்நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இளஞ்செழியன் அதை செய்யாமல் வேறு வேலையில் மூழ்கிக் கிடக்கிறார். எச்ஆர்டிஎப் விசாரணை எந்த அளவில் இருக்கிறது. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இதனை எப்படி நடைமுறை படுத்துவது என்று இளஞ்செழியன் ஆராய வேண்டும். குலசேகரன் போன்று ஜாடிக்கு ஏற்ற முடியாக இருக்கக் கூடாது என்று பலர் தெரிவித்தனர்.
          இந்த தொழில்திறன் விவகாரத்தில் குலசேகரன் வாய்திறக்க இளஞ்செழியன் நடவடிக்கை அமைய வேண்டும். இந்திய தொழில்திறன் கல்லூரியின் சோற்றில் மண்ணை போட முயலக்கூடாது. ஆகையால், தொழில்திறன் நடத்துநர்கள் குறிப்பாக இந்தியர்கள் விவகாரத்தில்  இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments