ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான ஏற்பாட்டில் கல்வி மகாயாகம்' பிரார்த்தனை!

ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான ஏற்பாட்டில் கல்வி மகாயாகம்' பிரார்த்தனை! 

மு.வ.கலைமணி

தென் செபராங் பிறை, செப்.24
            சிம்பாங் அம்பாட், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான ஏற்பாட்டில் கடந்த ஞாயிறன்று  யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மகாயாகமும் பிரார்த்தனை பூஜையும் சிறப்பாக நடந்தேறியது.       தேவஸ்தான நிர்வாகக்குழுவினர்களின் கல்விப்பணியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்று வட்டார தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களோடு மலாய் பள்ளியில் பயிலும் மாணவர்களும்   திரளாக கலந்து மகா யாகத்திலும் பிரார்த்தனையிலும் பங்கு பெற்றனர்.
      தேவஸ்தான பிரதான தலைமை குருக்கள் சிவஸ்ரீ முத்து குமார் குருக்கள் இம்மகாயாகத்தினை சிறப்பாக நடத்தி கலந்துக் கொண்ட மாணவர்களின் பெற்றோர்களின் பாராட்டுதனைப் பெற்றுக் கொண்டார்.
       நிர்வாகக் குழுவினர்களின் சார்பாக கலந்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments