யூபிஎஸ்ஆர் மாணவர்கள் நம்பிகையோடு தேர்வுக்கு அமர வேண்டும்! மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்து

யூபிஎஸ்ஆர் மாணவர்கள் நம்பிகையோடு தேர்வுக்கு அமர வேண்டும்!
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர், செப்.20-
           நாடு தழுவிய நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் நாள் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு தேர்வுக்கு அமர வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
          முதல் 6 ஆண்டுகள் கல்விக்கு யூபிஎஸ்ஆர் தேர்வு அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்திற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல மாணவர்கள் குறிப்பாக  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் பாலமாக செயல்பட்டுள்ளனர்.
ஆகையால், மாணவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு தேர்வுக்கு அமர வேண்டும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.
          நாடு தழுவிய நிலையில் தமிழ்ப்பள்ளி   மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமிழ்மொழி தேர்வு எழுதவிருக்கின்றனர். அதேநேரத்தில் மலாய்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தேர்வு எழுதவிருக்கின்றனர்.
          தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மஇகா முதுகெலும்பாக இருந்து வந்துள்ளது. யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மஇகா அங்கீகாரம் வழங்கியுள்ளது.  யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு இதுவொரு மதிப்பீட்டுச் சோதனையாகும் கடந்த  6 ஆண்டுகள் படித்ததற்கான அடித்தளத்தை இத்தேர்வு அமைத்துக் கொடுக்கிறது. இந்தத் தேர்வு அவர்களின் இடைநிலைப் பள்ளிக்காக வகுப்புகளை தரம்பிரிக்கின்றது என்பதால் மாணவர்கள் அனைவரும் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிந்தித்து, நன்கு யோசித்து கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். தேர்வை மிகவும் நம்பிக்கையோடு எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments