இளைஞர்களை முன்னேடுத்துச் செல்ல துணைத் தலைவருக்கு போட்டியிடுகிறேன்! -சுபாஸ் சந்திரபோஸ்

இளைஞர்களை முன்னேடுத்துச் செல்ல துணைத் தலைவருக்கு போட்டியிடுகிறேன்!
-சுபாஸ் சந்திரபோஸ்

கோலாலம்பூர், செப்.29-   
           இளைஞர்களை முன்னேடுத்துச் செல்ல தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவருக்கு போட்டியிடவிருப்பதாக சுபாஸ் சந்திரபோஸ் கூறினார்.
            மஇகாவில் இளைஞர்கள் பலர் இணைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் இலக்காகும். இந்த இலக்கை பூர்த்தி செய்ய தாம் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக சுபாஸ் சந்திரபோஸ் தெரிவித்தார்.
         மஇகா தற்போது எதிர்கட்சியாக இருந்த போதிலும் இளைஞர்களைக் கவர முடியும் என்று இலக்கு வைத்தால் கண்டிப்பாக இளைஞர்களை மஇகாவில் இணைக்க முடியும். நமக்கு தற்போதைய வேலையே எதிர்கட்சியாக இருந்து மஇகா இளைஞர்களுக்காக போராட்டம் நடத்த வேண்டும். அதேநேரத்தில் ஆளுங்கட்சியின் பலவீனங்களை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதுதான் என்று சுபாஸ் சந்திரபோஸ் சொன்னார்.
       கடந்த 12 ஆண்டுகளாக மஇகா பல பதவிகளை வகித்து வந்திருக்கும் 39 வயதான சுபாஸ், பூச்சோங் பெர்டானா கிளை இளைஞர் பகுதி தலைவராகவும் பூச்சோங் தொகுதி இளைஞர் பகுதி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
          அதேநேரத்தில் ம இ கா சிலாங்கூர் மாநில தகவல் பிரிவு தலைவராகவும் தேசிய தகவல் பிரிவில் பொறுப்பதிகாரியாகவும் இருந்துள்ளார். மஇகாவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ள சுபாஸ் மஇகாவில் இன்போ சுன் (INFO ZON) மூலம் மஇகா தொடர்பான தகவல்களை நாடு தழுவிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
             நாடு தழுவிய நிலையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பான பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ள சுபாஸ் சந்திரபோஸ் கட்சியின் மேல்மட்ட பதவியில் இருந்து கொண்டு இன்னும் பல சேவைகளை இளைஞர்களுக்காக மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தேசிய இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக சுபாஸ் சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார்.
           கட்சியில் அதிகமான இளைஞர்களைக் கொண்டு வரவும் இளைஞர்களுக்காக பல மேம்பாடுகளைக் கொண்டு வரவும்  சுபாஸ் சந்திரபோஸ் திட்டமிட்டிருக்கிறார்.
          நாளை செப்டம்பர் 29ஆம் நாள் நடைபெறவிருக்கும் மஇகா தேசிய இளைஞர் பகுதி  துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நமக்கு வாக்களித்து ஆதரவு வழங்க வேண்டும் என்று சுபாஸ் சந்திரபோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments