ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி ரத ஊர்வலம்! நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி ரத ஊர்வலம்!
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

குணாளன் மணியம்

ரவாங், செப்.14-
          ரவாங் ஸ்ரீவீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ரத ஊர்வலத்துடன் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

            ரவாங்கில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீவீரகத்தி விநாயகர் ஆலயம் தற்போது 10 லட்சம் வெள்ளி செலவில் திருப்பணியில் உள்ளது. எனினும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதால் இவ்வாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக ஆலயத் தலைவர் திரு.ரவிநாத் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

          இந்த விநாயகர் சதுர்த்தி வைபவத்தில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், ஹெனிகேன் நிறுவனத்தின் அனைத்துலக வர்த்தக மற்றும்
ஒருங்குணைப்பு நிர்வாகி பிரான்சிஸ் இயூ, செலாயாங் நகராண்மைக்கழக
உறுப்பினர் சரவணன், மலேசிய இந்து சங்கம் ரவாங் வட்டாரப் பேரவை தலைவர் பத்மநாபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

          விநாயப் பெருமான் ரதத்தில் எழுந்தருளி ரவாங் நகர் ஊர்வலம் வந்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments