ஆஸ்ட்ரோ வானவில் வழங்கும் ‘நான் கபாலி அல்ல’ புத்தம் புதிய தொடர் நாடகம்

ஆஸ்ட்ரோ வானவில் வழங்கும் ‘நான் கபாலி அல்ல’ புத்தம் புதிய தொடர் நாடகம்

கோலாலம்பூர், செப்டம்பர் 7-
      நாட்டின் வளர்ச்சி இளைய தலைமுறையினரை நம்பி இருப்பதால் அவர்களுக்கு தேவையான பயனுள்ள வழியைக் காட்டுவதில் நம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வகையில், தற்போது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் சமூக குற்றச்செயல்கள் மற்றும் அவற்றிலிருந்து வெளியேறும் வழிமுறைகளை  மையப்படுத்தி, ‘நான் கபாலி அல்ல’ புத்தம் புதிய தொடர் நாடகம் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறவுள்ளது.
செப்டம்பர் 9-ஆம் தேதி தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளியேறவுள்ள இத்தொடர் நாடகத்தை ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகக் கண்டுகளிக்கலாம்.
        ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், மலேசிய இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பல சமூக பிரச்சனைகள் எதிர்நோக்கி வருகின்றார்கள். அவற்றுள் பள்ளிப் பருவத்தை முடிக்காமல் இளம் வயதிலே குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். சுமார் 20% மாணவர்கள் தங்களுடைய இடைநிலைப் படிப்பை முடிக்காமல் பள்ளியை விட்டு வெளியேறுகின்றார்கள். இவர்கள் 13 முதல் 17 வயதுக்குள் உட்பட்டவர்கள் ஆவர். இவ்வகையான பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான சரியான தேர்வுகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘நான் கபாலி அல்ல’ தொடர் நாடகத்தைத் தயாரித்துள்ளோம். இத்தொடர்கள் நல்லதோரு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன்”.
13 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடர் நாடகத்தை ஆர். பி. ரவி மற்றும் பாரதிராஜா இயக்கியுள்ளார்கள். குண்டல் கும்பல், போதைப் பழக்கம் மற்றும் கடத்தல் ஆகிய சமூக குற்றச்செயல்கள் இத்தொடரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நம்முடைய உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்களுடன் முக்கிய சில பிரமுகர்கள் இத்தொடர் நாடகத்தில் நடித்துள்ளார்கள். ஜஸ்மின் மைக்கேல், டேவிட் அந்தோணி, சேம், டாக்டர் செல்வமூத்து, கே.எஸ். மணியம், போஸ் வெங்கட், விஜத், நிரோஷா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர்
         'நான் கபாலி அல்ல’ தொடர் நாடகத்தைக் குறித்த மேல் விவரங்களுக்கு  www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.

Comments

  1. Naan kabali alla todar naadagam, nam samuthaayam paarkke veendiye oru naadagam, inthe todar naadagattai kaana tavaraathirgal..

    ReplyDelete

Post a Comment