சொஸ்மா கைதிகளை விடுவிக்கக் கோரி குடும்பத்தினர் மெழுகுவர்த்தி பிரார்த்தனை!

சொஸ்மா கைதிகளை விடுவிக்கக் கோரி குடும்பத்தினர் மெழுகுவர்த்தி பிரார்த்தனை!

பத்து ஆராங், செப்டம்பர் 4-
         சொஸ்மா எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி பிரார்த்தனை மேற்கொண்டனர்.
            பத்து ஆராங் கன்ரி ஹோம்ஸ் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் திரண்ட 200க்கும் மேற்பட்ட சொஸ்மா கைதிகள் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
          நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் சோஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றவியல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சுங்கை பூலோ சிறைச்சாலையில்  160 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தில் பிடிபட்டவர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும். சொஸ்மா சட்டத்தை அகற்ற வேண்டும் என்று கோரி கைதிகள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதேவேளையில் அவர்களின் குடும்பத்தினர் சிறைக்கு வெளியே அமைதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      இந்நிலையில் பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ ஹனிபா மைடின் சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று கைதிகளுடன் பேச்சு நடத்தினார். இந்த விவகாரத்தை சட்டத்துறை தலைவர் டோமி தோமஸுடன் பேச்சு நடத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
         இந்த சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கமும் சட்டத்துறை அலுவலகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைக்கு சவால்விடும் சொஸ்மா சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவர்களின் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் யோகேஸ்வர்ராவ் குறிப்பிட்டார்.

Comments