மக்கள் நலன் காப்பதை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்! கூட்ட இறுதி நாளில் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து

மக்கள் நலன் காப்பதை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்! 
கூட்ட இறுதி நாளில் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர், செப்.13 -
        மக்கள் நலன் காப்பதை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் உறுதி  வேண்டும் என்று மேலவை உறுப்பினர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.     
        நாடாளுமன்ற மேலவை கூட்டத் தொடர் நடைபெற்ற 10 நாட்களில் பல்வேறு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதோ இல்லையோ  மதிப்புமிகு மேலவை உறுப்பினர்கள் மக்கள் நலன், சுபீட்சம் காப்பதை முக்கியமாக கருத வேண்டும் என்று  நாடாளுமன்றத்தின் 14ஆவது தவணைக்காக முதலாவது மேலவைக் கூட்டத் தொடரை ஒத்திவைத்து உரையாற்றுகையில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு கூறினார்.
         மேலவை கூட்டத் தொடர் நடைபெற்ற போது விற்பனை வரி மசோதா மற்றும் சேவை வரி சட்டமசோதா குறித்த பல்வேறு யூகங்கள், கருத்துகள் இருந்தாலும்  இது அரசியலை நடைமுறைப்படுத்தும் ஒரு இடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதில் எல்லா சட்டமசோதாக்களும்  வெற்றிகரமான இல்லாவிட்டாலும் மேலவை உறுப்பினர்கள்  மக்கள் நலன் பாதுகாக்க உறுதி செய்ய வேண்டும் என்பது தெளிவடைந்துள்ளதாக தாம் நம்புவதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
         இந்த தெளிவானது நாட்டின்  ஜனநாயக அமைப்பில் மக்கள் நம்பிக்கையை தீவிரப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் ஜனநாயம் என்று பேசும் போது கடந்த 1959ஆம் ஆண்டில் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மாட்சிமை தங்கிய பேரரசர் உரை ஞாபகத்திற்கு வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடக்கி வைத்த போது,  நாடாளுமன்ற ஜனநாயகம், மலாயா கூட்டமைப்பு சட்டதிட்டங்கள், நமது  உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து நமது பேரரசர் பேசியிருந்தார. அவ்வகையில் நமது அரசியலமைப்பில்  ஜனநாயகம் இருப்பதால் நாடாளுமன்ற ஜனநாயத்தை நாம் மறவாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
           நாம் அனைவரும் இந்த மேலவையின் மாண்பைக் காப்போம் என்று நான் நம்புகிறேன். இந்த மேலவையின் கண்ணியம் காக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள கடமையை  முறையாக நிறைவேற்றுவோம். ஆகையால், மலேசிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை காப்பது அதன் உறுப்பினர்களிடத்தில் இருக்கிறது என்றார் அவர்.
          நாட்டின் கூட்டரசு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உயர்பதவி வகிக்கும் நாடாளுமன்ற மக்களை மற்றும்  மேலவை உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தின் மாண்பை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களும் புரிந்து கொண்டால், நாடாளுமன்றத்தில்  சட்டமசோதா நிறைவேற்றப்படும் போது நாடு மற்றும் மக்கள் நலன் பேணப்படும் என்று தாம் பெரிதும் நம்பதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மேலும் குறிப்பிட்டார்.
          அடுத்தடுத்த கூட்டத் தொடர்களில் மேலவை உறுப்பினர்களின் விவாத திறன் மேம்படும் என்று நான் நம்புகிறேன். அதேநேரத்தில் எல்லா உறுப்பினர்களும் நாடாளுமன்ற சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றியுள்ள  மேலவைச் செயலாளர், பணியாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
             மேலவைக் கூட்டம் முடிந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் உறுப்பினர்கள் பாதுகாப்பாகவும் நலமுடனும் சென்று குடும்பத்துடன் இணைய வேண்டும் என்றும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

Comments