மலேசிய இந்தியர்கள் நலன் காக்க "மலேசிய முன்னேற்றக் கட்சி"! அமைச்சர் பொன். வேதமூர்த்தி அறிவிப்பு

மலேசிய இந்தியர்கள் நலன் காக்க  "மலேசிய முன்னேற்றக் கட்சி"!
அமைச்சர் பொன். வேதமூர்த்தி அறிவிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், செப்.8-         
            மலேசிய இந்தியர்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, கலாச்சாரம், சமூகவியல் ஆகியவற்ளில் முன்னேறிச் செல்ல மலேசிய முன்னேற்ற கட்சியை தொடங்கியுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
             இந்திய சமூகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை ஒரு கட்சியின் வழியே தீர்வு காண முடியும் என்பதால் தாம் மலேசிய முன்னேற்ற கட்சியை தொடங்கியிருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.
             மலேசிய முன்னேற்ற கட்சி இந்தியர் நலனுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு கட்சி. இக்கட்சி நம்பிக்கை கூட்டணிக்கு உட்பட்ட கட்சிகளுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்படும். இது இந்தியர் நலனுக்காக பாடுபடும் கட்சியாக இருக்கும். இக்கட்சிக்கான பதிவு விண்ணப்பம் ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்கள் பதிவு இலாகாவில் வழங்கப்பட்டுள்ளதாக பொன்.வேதமூர்த்தி தேசம் வலைத்தளத்திடம் சொன்னார்.

Comments

Post a Comment