இறைவனுக்கு வாழைத் தண்டு நார் மாலைதான் உகந்தது! பிளாஸ்டிக் கயிற்றில் தொடுக்கப்பட்ட மாலைகளை புறக்கணிப்போம்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வேண்டுகோள்

இறைவனுக்கு வாழைத் தண்டு நார் மாலைதான் உகந்தது! 
பிளாஸ்டிக் கயிற்றில் தொடுக்கப்பட்ட மாலைகளை புறக்கணிப்போம்! 
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வேண்டுகோள்

குணாளன் மணியம்

கிள்ளான், செப்.25-
           இறைவனுக்கு வாழைத் தண்டு நாரில்  மாலை தொடுப்பதுதான் உத்தமம். நெகிழி கயிற்றில் (பிளாஸ்டிக் கயிறு) மாலைகள் தொடுக்கப்படுவதை முற்றாக துடைத்தொழிக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


         பூமாலைகள் தொடக்கும் கடைகாரர்கள் வாழை நாரில்  பிளாஸ்டிக் கயிற்றை கொண்டு மாலை கட்டுகின்றனர். இது இறைவனுக்கு உகந்ததல்ல. அந்த பிளாஸ்டிக் கயிறு சுந்தமானவை அல்ல. அது பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யப்பட்டு பிளாஸ்டிக் கயிறாக தயாரிக்கப்பட்டுள்ளது.இதை நாம் இறைவனுக்கு சாற்றுவது முறையாக என்று கிள்ளானில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு சுமங்கிலி பூசை நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் குணராஜ் அவ்வாறு சொன்னார்.
          இந்த பிளாஸ்டிக் கயிற்றில் கட்டப்பட மாலைகள் நமது கழுத்தில் போட்டால் நமக்கு எப்படி இருக்கும்? நம்மை படைத்த இறைவனுக்கு நாம் முறையாக செய்ய வேண்டாமா? நாம் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும். இனிமேல் பிளாஸ்டிக் கயிற்றில் தொடுக்கப்பட்ட மாலைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.
           பூக்கடைகளில் மாலைகள் வாங்கும்போது அது வாழை நாரில்  கட்டப்பட்டதா அல்லது பிளாஸ்டிக் கயிற்றில் கட்டப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்க வேண்டும். அப்படி அந்த மாலை பிளாஸ்டிக் கயிற்றில் கட்டப்பட்டிருந்தால் அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வாழை நீரில் கட்டப்பட்ட மாலைதான் வேண்டும் என்று நாம் கேட்டால் அவர்கள் அதனை கட்டித் தானே ஆக வேண்டும். நாம் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.  ஆகையால்,  பிளாஸ்டிக் கயிற்றில் கட்டப்பட்ட மாலைகளை வாங்காமல் வாழைத் தண்டு நாரில்  தொடுக்கப்பட்ட மாலைகளை மக்கள் வாங்க வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

Comments