*அனைத்துலக இளம் அறிவியல் ஆய்வாளர் விழா!* *பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளி வென்று சாதனை* கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

*அனைத்துலக இளம் அறிவியல் ஆய்வாளர்  விழா!*
*பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளி வென்று சாதனை*
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கோலாலம்பூர், செப். 26-   
     இந்தோனேசியாவில் (பாலி)  நடைபெற்ற  5ஆம் ஆண்டு அனைத்துலக அறிவியல் ஆய்வாளர் போட்டியில் பூச்சோங் 14ஆவது மைல்  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளி வென்று சாதனை படைத்தனர். நாடு திரும்பிய அவர்களுக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பள்ளியின் சார்பில்  உற்சாக வரவேற்பு வழங்கப்பப்பட்டது.
        5ஆம் வகுப்பு ரோஜா பிரிவைச் சார்ந்த மருதவாணன் இரகுராமன்,
ஹரேஸ் குமார் சாய் அறிவழகன்,
நிகேஷ் விஜியன்,
சுபாஷினி விமலன்,
தேவிகா இராஜா குமார், ஆகியோர் இந்தப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
      இவர்கள் தங்களது கண்டுபிடிப்பாக பலாப்பழத்திலிருந்து கழிவாக வெளியேற்றப்படும் நாரிலிருந்து சைவ  நாகெட் செய்து அசத்தினர். இவர்களின் கண்டுபிடிப்புக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த  இவர்களைப் பாராட்டும் நோக்கத்தில் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்களும் விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
        தமிழிப்பள்ளி மாணவர்களின் இத்தகைய சாதனைகள் சமுதாயத்தினர்களின் மத்தியில் வரவேற்பையும், தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமையையும் தேடித்தருகின்றன.

Comments