அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் "மலேசிய முன்னேற்றக் கட்சி" இந்தியர்களை ஒன்றிணைக்கும் சரியான ஒரு தளம்! -இந்தியர் பண்பாட்டு கலாச்சார மையம் பெஸ்தாரி ஜெயா இயக்கத் தலைவர் ஐய்யப்பன் முனியாண்டி நம்பிக்கை

அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் "மலேசிய முன்னேற்றக் கட்சி" இந்தியர்களை ஒன்றிணைக்கும் சரியான ஒரு தளம்!
-இந்தியர் பண்பாட்டு கலாச்சார மையம் பெஸ்தாரி ஜெயா இயக்கத் தலைவர் ஐய்யப்பன் முனியாண்டி நம்பிக்கை

பெஸ்தாரி ஜெயா, செப். 18-
           மலேசிய இந்தியர்கள் நலன் கருதி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடங்கியுள்ள மலேசிய முன்னேற்ற கட்சி  இந்தியர்களை ஒன்றிணைக்கும் சரியான ஒரு தளம் என்று இந்தியர் பண்பாட்டு கலாச்சார மையம் பெஸ்தாரி ஜெயா இயக்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வர்ணித்துள்ளார்.
           நாட்டில் ஏற்பட்டுள்ள அதிரடி ஆட்சி மாற்றத்தில் நடப்பு அரசாங்கத்தை பிரதிநிதித்து இந்தியர்களுக்கென தனி கட்சி எதுவும் இல்லை. இதனை கருத்தில் கொண்டே அமைச்சர் வேதமூர்த்தி "மலேசிய  முன்னேற்றக் கட்சியை (Malaysian Advancement Party) (MAP) தொடங்கியுள்ளார். இந்தியர்களை ஒன்றிணைக்கும் சரியா ஒரு தளமாக எம்ஏபி கட்சி திகழ்கிறது என்று ஐயப்பன் முனியாண்டி தெரிவித்தார்.
            இந்த கட்சி இந்தியர்களை மேலும் பிளவுபடுத்தும் என்று கூறுவது தவறு. இந்நாட்டில் அரசியலில் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினர் சரியான ஒரு தளத்தை தேடிக் கொண்டிருக்கிறனர். முன்பு எதிர்க்கட்சிகளாக இருந்த ஜசெக, பிகேஆர், பெர்சத்து ஆகிய கட்சிகள் இப்போது ஆளும் கட்சிகளாக உருவெடுத்துள்ள நிலையில் இதில் இந்தியர் சார்ந்த பிரதிநிதித்துவக் கட்சி இல்லை. இதற்காக ஆளும் கட்சிகளில் இந்தியர்களை ஒன்றிணைக்கும் ஒரு கட்சியாக வேதமூர்த்தியின் எம்ஏபி கட்சி இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று ஐயப்பன் முனியாண்டி தெளிவுபடுத்தினார்.
          நாம் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறோம். இனியும் இது சொத்தை, அது சொத்தை என்று கூறிக் கொண்டிருக்க முடியாது. அடுத்த இளம் தலைமுறைக்காக வேதமூர்த்தி தொடங்கியுள்ள எம்ஏபி கட்சி இந்தியர் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் என்று ஐயப்பன் முனியாண்டி சொன்னார்.
          இந்த எம்ஏபி கட்சியின் வழி இந்தியர்களுக்கான  பல திட்டங்களை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வகுத்து அரசாங்கத்திடம் வழங்கி நமக்கான வாய்ப்புகளை பெற்றுத் தர வாய்ப்பு இருக்கிறது. இந்தியர், தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை மேம்படுத்த அரசாங்க நிதியை பெற வாய்ப்பு ஏற்படுத்தும் ஒரு தளமாக இக்கட்சி அமையும் என்றார் அவர்.
          பிகேஆர், பெரிபுமி, பெர்சத்து கட்சிகளில் மலாய்க்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஜசெக கட்சியில் சீனர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் இந்தியர் சார்ந்த ஒரு கட்சியாக எம்ஏபி  அமையும் என்பதால் இக்கட்சிக்கு முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாக ஐயப்பன் முனியாண்டி குறிப்பிட்டார்.

Comments