கிள்ளான் நகராண்மைக்கழகத்திற்கு உட்பட பகுதிகளுக்கான மேம்பாட்டு வரைவுத் திட்டம்! பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

கிள்ளான் நகராண்மைக்கழகத்திற்கு உட்பட பகுதிகளுக்கான மேம்பாட்டு  வரைவுத் திட்டம்!
பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

கிள்ளான், செப்.25-
          கிள்ளான் நகராண்மைக்கழகத்திற்கு உட்பட பகுதிகளுக்கான மேம்பாட்டு வரைவு திட்டத்திற்கு பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று செந்தோசா சட்டமன்ற அலுவலகம் கூறியுள்ளது.
            இந்த 2035 வரையிலான வரைவுத் திட்டம் தொடர்பான சந்திப்பு கூட்டம் நாளை புதன்கிழமையும் நாளை மறுநாள் வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது.
           இந்த சந்திப்பு கூட்டத்தில் கிள்ளான் நகர மேம்பாடு குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன. கிள்ளான் நகரை இப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்று ஆலோசனை அல்லது கருத்துகளை தெரிவிக்க விரும்பும் பொது மக்கள் கீழ்க்காணும் மின்னஞ்சல் வழி தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என்று செந்தோசா சட்டமன்றம் கேடுக் கொண்டுள்ளது.

pusatkhidmatsentosa@gmail.com
Jabatan Perancangan Bandar Dan Desa
Persediaan Draf awal Rancangan Tempatan

Comments